இனி அதிமுகவுக்கு டிடிவி தினகரன் உரிமை கோர முடியாது... கட்சியாகிறது அமமுக...!

தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.

news18
Updated: April 19, 2019, 12:53 PM IST
இனி அதிமுகவுக்கு டிடிவி தினகரன் உரிமை கோர முடியாது... கட்சியாகிறது அமமுக...!
டிடிவி தினகரன்
news18
Updated: April 19, 2019, 12:53 PM IST
அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை சசிகலா நடத்த இருக்கிறார். மேலும், அமமுகவை கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்து அதன் பொதுச்செயலாளராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் ஈ.பி.எஸ் - ஒ.பி.எஸ் அணி இணைந்த பின்னர், டிடிவி தினகரன் அமமுக என்ற இயக்கத்தை தொடங்கினார்.

அமமுகவின் பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் பொறுப்பு வகிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர்.

அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால், அவர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். எனினும், உச்ச நீதிமன்றம் சென்று பரிசுப்பெட்டி சின்னத்தை டிடிவி தினகரன் பொதுச்சின்னமாக பெற்றார்.

இந்நிலையில், அமமுகவை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் டிடிவி தினகரன் பதிவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும், அதனால் அமமுகவின் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் பொறுப்பேற்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார்.

இன்று நடந்து வரும் அமமுக நிர்வாகிகள் கூட்டத்தை அடுத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

எனினும், அதிமுகவில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 3 எம்.எல்.ஏ.க்கள் இருக்கும் நிலையில், அவர்கள் டிடிவி கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தால், கட்சித்தாவல் தடை சட்டத்தின் படி அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.

அமமுக கட்சியாக பதிவு செய்யப்பட்டால், அதிமுக மீது டிடிவி தினகரன் எந்த உரிமையும் கோர முடியாது.

இன்றைய முக்கியச் செய்திகள்...
First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...