• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அமமுக-அதிமுக இணைப்பா? மதுரை ஆதினம் கருத்துக்கு தினகரன் மறுப்பு

அமமுக-அதிமுக இணைப்பா? மதுரை ஆதினம் கருத்துக்கு தினகரன் மறுப்பு

மதுரை ஆதினம்

மதுரை ஆதினம்

அதிமுக அழைத்தால் தேர்தல் பிரசாரம் செய்ய தயாராக இருப்பதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் - அதிமுகவும் விரைவில் இணையும் எனவும், பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், மதுரை ஆதினம் தெரிவித்திருந்த நிலையில், டிடிவி.தினகரன் மறுத்துள்ளார்.

கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான, சாட்சிநாதர் கோயிலில், மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை புரிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவும் அமமுகவும் விரைவில் இணைவது உறுதி என்றார். தினகரன் பண்பாளர் என்றும், மிகவும் பொறுமைசாலி என்று கூறினார். அதிமுக அழைத்தால் தேர்தல் பிரசாரம் செய்வேன் என்றும் மதுரை ஆதினம் கூறினார்.



இதனிடையே அதிமுகவில் இணைய சமரம் செய்து வருவதாக மதுரை ஆதினம் கூறியது, ஆதாரமற்றது என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார். இது குறித்து டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், அது உண்மையும் அல்ல; இணைப்பதற்கு அவசியமும் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: