முறுக்கு மீசை, ஷேவ் செய்யாத வெள்ளை தாடி; ஊரடங்கில் எங்கே, எப்படி இருக்கிறார் டிடிவி தினகரன்?

டிடிவி தினகரன்

TTV Dhinkaran | Lockdown | டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக  கட்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

  • Share this:
கொரோனா ஊரடங்கால் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இப்போது எங்கே, எப்படி இருக்கிறார்? என்பதை பார்க்கலாம்.

கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் நாடெங்கும் பரவி வருவதால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக அனைத்துதரப்பு மக்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கும் இந்த நிலையில், மிகவும் பரபரப்புடன் இருந்த அரசியல்வாதிகளும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

வீட்டிலேயே முடங்கி இருந்தாலும் வீட்டில் இருந்தபடி கட்சிப் பணிகளை அனைத்து தலைவர்களுமே செய்துதான் வருகின்றனர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தொலைபேசி வாயிலாக  கட்சிப் பணிகளை  பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்து கடந்த ஒரு மாத காலமாக தங்கி கவனித்து வருகிறார்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக ஷேவிங் செய்யாமல் வெள்ளை தாடியுடன், முறுக்கு மீசையுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களும் நிர்வாகிகளும் தங்களுடைய சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இந்த புகைப்படங்களை விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஒருவர் எடுத்து தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதனை அனைத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களும் நிர்வாகிகளும் ஷேர் செய்து வருகின்றனர்.

சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Published by:Vijay R
First published: