தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் - டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

துரோக கூட்டணி பணத்தைதான் நம்புகிறது, மக்களை பணம் வைத்து ஏமாற்றிடலாம் என நினைக்கிறார்கள்...

 • Share this:
  மதுரவாயல் சட்டமன்ற தொகுதியில் அமமுக சார்பில் லக்கி முருகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போரூர் சிக்னல் அருகே திறந்த வேனில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “புரட்சி தலைவரால் தீய சக்தி என காட்டப்பட்ட திமுக கூட்டணி, காவேரி, கட்சத்தீவு, நீட் அனைத்திற்கும் காரணம் திமுக, எப்படியாவது ஆட்சிக்கு வர திமுகவினர் துடிக்கிறார்கள். ஏதேதோ ஏமாற்றும் அறிக்கை வெளியிடுகிறார்கள்.

  மற்றொரு கூட்டணி துரோக கூட்டணி. அந்த கூட்டணி பணத்தைதான் நம்புகிறது. மக்களை பணம் வைத்து ஏமாற்றிடலாம் என இருக்கிறார்கள். உண்மையான ஆட்சி அமைக்க அம்மா மக்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள்.

  தமிழகத்தில் 7 லட்சம் கோடி கடனை வைத்து கொண்டு எப்படி மாதாந்தோறும் ரூ.1500, 1000 தர முடியும், ஓய்வூதியமே வழங்காத அரசால் எப்படி மாதம், மாதம் பணம் தர முடியும்?, எனவேதான், அமமுக வீடுதோறும் ஒருவருக்கு அரசு வேலை, இளைஞர்கள் படித்தவர்களுக்கு கடனுதவி மானியம் வழங்கப்படும் என கூறியது.

  Must Read : தமிழகத்தில் மீண்டும் ஆயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று... இன்றைய பாதிப்பு நிலவரம்

   

  சமநீதி ஆட்சியை அமமுக அளிக்கும், தமிழர் வாழவு மலர குக்கர் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும், அனைத்து சமுதாயத்திற்கு சமநீதி வழங்கும் சமுதாயத்தை உண்டாக்கும் கட்சி அமமுகதான் எனவும், தீய சக்தியையும், துரோக சக்தியையும் ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டும் என்று தினகரன் கூறினார்.
  Published by:Suresh V
  First published: