• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • MK Stalin : மக்களைப் பாதுகாத்திட வாழ்த்துகிறேன்... : மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

MK Stalin : மக்களைப் பாதுகாத்திட வாழ்த்துகிறேன்... : மு.க.ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

டிடிவி தினகரன்-மு.க.ஸ்டாலின்

டிடிவி தினகரன்-மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சராக இன்று பதவியேற்கும் மு.கஸ்டாலினுக்கு, கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துவதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றததைத் தொடரந்து, தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்.

    அதன்படி, ஆளுநர் மாளிகையில் இன்று காலை 9 மணிக்கு எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அப்போது ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவரைத் தொடர்ந்து 33 பேர் தமிழக அமைச்சர்களாக பதவியேற்க இருக்கின்றனர்.

    இந்நிலையில், முதலமைச்சராக பதவியேற்கும் ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில், “தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துகள். தங்களின் பதவியேற்பு விழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி. கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி, தமிழ்நாட்டு மக்களைப் பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    https://twitter.com/TTVDhinakaran/status/1390486589428490243?s=08

    Must Read : எதிர்க்கட்சி தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட வேண்டும்... : அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

     

    பதவியேற்பு விழாவிற்கு டிடிவி தினகரன், சீமான், கமல்ஹாசன், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும், ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: