ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார் - உறுதி செய்த டி.டி.வி.தினகரன்

சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார் - உறுதி செய்த டி.டி.வி.தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் தண்டனை காலம் முடிந்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் அறிவித்தது.

சசிகலா 27ஆம் தேதி விடுதலை ஆக இருந்த நிலையில், கடந்த வாரம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு, இதனைத் தொடர்ந்து அவர் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டது. இதனால், சசிகலா 27ஆம் தேதி விடுதலை செய்யப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில். சசிகலாவின் உடல் நலத்தில் தொடர்ந்து நல்ல முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், சசிகலாவின் விடுதலை குறித்து டி.டி.வி.தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ‘நம் அனைவருடைய எதிர்பார்ப்பின்படி சசிகலா நாளை மறுநாள் 27.01.2021 அன்று விடுதலையாகிறார். கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்பு வெகுவாக குறைந்து அவர்கள் உடல்நிலை தேறி வருவதால், மருத்துவர்களின் உரிய ஆலோசனை பெற்று பெங்களூரு மருத்துவமனையில் இருந்து வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Sasikala, TTV Dhinakaran