Home /News /tamil-nadu /

நகைக் கடன் தள்ளுபடி: திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

நகைக் கடன் தள்ளுபடி: திமுக அரசு மக்களை ஏமாற்றுகிறது - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
    தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

    கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.  அதன்படி, கடந்த செப்டம்பர் 13ம் தேதி நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    கூட்டுறவு சங்க நகை கடன்களை ஆய்வு செய்யும் பணிகளை நவம்பர் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இருப்பினும் இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடையாமல் இருந்து வந்தது.

    இந்நிலையில், கூட்டுறவுத்துறை பதிவாளர்  சண்முக சுந்தரம் கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம் மற்றும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், 48,84,726 நகைக் கடன் விவரங்கள் அனைத்தும் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு, அதில் 35,37,693 விண்ணப்பங்கள் தகுயில்லாதவை என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: இத்தனை லட்சம் பேருக்கு தகுதியில்லை என தமிழக அரசு அறிவிப்பு


    தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் தி.மு.க அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது.



    எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளி தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களைத் தேடுவது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.

    மேலும் படிங்க: ஆவினில் ஒட்டுமொத்த ஊழலுக்கும் ராஜேந்திர பாலாஜிதான் காரணம்: அமைச்சர் நாசர்


    எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை தி.மு.க அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், தி.மு.க என்றாலே தில்லுமுல்லு என்பதை தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள் என்று விமர்சித்துள்ளார்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Gold loan, Tamilnadu govt, TTV Dhinakaran

    அடுத்த செய்தி