• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ’பிரித்தாளும் சூழ்ச்சியை விட்டுவிட்டு வளர்ச்சியை யோசிப்பதே புத்திசாலித்தனம்’ - கொங்கு நாடு விவகாரத்தில் டிடிவி தினகரன் கருத்து

’பிரித்தாளும் சூழ்ச்சியை விட்டுவிட்டு வளர்ச்சியை யோசிப்பதே புத்திசாலித்தனம்’ - கொங்கு நாடு விவகாரத்தில் டிடிவி தினகரன் கருத்து

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்

  • Share this:
    தமிழகத்தை இரண்டாக பிரித்து ‘கொங்கு நாடு’ என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய அரசு முயற்சித்து வருவதாக தமிழில் வெளியாகும் தினசரி நாளிதழான ‘தினமலர்’ செய்தி வெளியிட்டிருந்தது.

    ஜெய்ஹிந்த் , ஒன்றிய அரசு உள்ளிட்ட விவகாரங்கள் தமிழக அரசு மீது மத்திய அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘கொங்கு நாடு’ குறித்து ஆலோசித்து வருவதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது. கொங்கு நாடு விவகாரம் தொடர்பாக நேற்று முதல் விவாதங்கள் எழுந்துள்ளது. தமிழக அரசியல் கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

    கொங்கு நாடு விவகாரம் தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டைப் பிரிக்க வேண்டும் என எழுந்திருக்கும் விஷமக்குரல்களை மத்திய, மாநில அரசுகள் ஆரம்பத்திலேயே அடக்கிட வேண்டியது அவசியம்.எந்தத் தரப்பு மக்களிடமும் அப்படி ஒரு சிந்தனையோ, கோரிக்கையோ எழாத போது சுயலாபத்திற்காக தமிழர்களை சாதிரீதியாக கூறுபோட நினைப்பதை ஒரு நாளும் அனுமதிக்க முடியாது.

     



    ஏற்கனவே, மொழிவாரி மாநிலப் பிரிவினையால் நமக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றுவரை தொடரும் நிலையில், சாதியை முன்வைத்து தமிழ்நாட்டைக் கூறுபோட்டால் அது தமிழினத்திற்கு பெரும் கேடாக முடிந்துவிடும். எனவே, வெள்ளைக்காரர்களைப் போல பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாளாமல், வளர்ச்சியைப் பற்றி யோசிப்பதே புத்திசாலித்தனமாக இருக்க முடியும்” எனக் கூறியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: