ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

டிடிவி தினகரன் முதலமைச்சர் வேட்பாளர்: அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்

டிடிவி தினகரன் முதலமைச்சர் வேட்பாளர்: அமமுக பொதுக்குழுவில் தீர்மானம்

அமமுக நிர்வாகிகள்

அமமுக நிர்வாகிகள்

அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு, தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலை நிமிர்ந்திடச் செய்வோம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் வேட்பாளராக நியமித்து கட்சி பொதுக்குழுவில் தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அமமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முதலமைச்சர் அரியணையில் அமரவைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், அதிமுகவை மீட்டெடுக்கவும், கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்க தினகரனுக்கு அதிகாரம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Must Read: மேடையில் மு.க.ஸ்டாலின் குரலில் பேசிய டிடிவி தினகரன்

கூட்டத்தில், 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றுள் முதன்மையானது, ”அமமுக எனும் ஜனநாயக ஆயுதம் கொண்டு, தவறான நபர்களின் சுயநலத்தில் சிக்கியுள்ள அதிமுகவை மீட்டெடுத்து தமிழகம் தலை நிமிர்ந்திடச் செய்வோம்.

தமிழர் வாழ்வு மலர்ந்திட தியாகத்தலைவி சசிகலா அவர்களின் நல்வாழ்த்துகளோடு செயல்படும் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்களை தமிழக முதல்வர் அரியணையில் அமரவைக்க அயராது உழைக்க சூளுரைப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: TN Assembly Election 2021, TTV Dhinakaran