ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

என் பவர் தெரியாம விளையாடுறீங்க... யாரை பார்த்தும் பயமில்லை... TTF வாசன் வீடியோ மூலம் எச்சரிக்கை

என் பவர் தெரியாம விளையாடுறீங்க... யாரை பார்த்தும் பயமில்லை... TTF வாசன் வீடியோ மூலம் எச்சரிக்கை

டிடிஎஃப் வாசன்

டிடிஎஃப் வாசன்

எனது பவர் தெரியாமல் நியூஸ் சேனல்ஸ் விளையாடிட்டு இருக்கிங்கனு கேட்க தோணுது.. ஆனா, கேட்க மாட்டேன். சுமூகமா போயிடலாம்னுதான் நான் இருக்கேன். நியூஸ் சேனல்ஸ் பார்த்து பயம் கிடையாது, யாரை பார்த்தும் பயம் கிடையாது- டிடிஎஃப் வாசன்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பைக்கில் அதிவேகமாக சென்று சாகசம் புரிந்து தற்போது போலீசாரின் வழக்குப் பதிவுக்கு உள்ளாகியுள்ள  யூ டியூபர் டிடிஎஃப் வாசன், செய்தி ஊடகங்களை எச்சரிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து வேகமாக வாகனத்தை இயக்கி அதை twin throttlers என்ற தனது யூடியூப் சேனலில் டிடிஎப் வாசன் வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து போத்தனூர் மற்றும் சூலூர் போலீசார் தலா 2 வழக்குகளை பதிவு செய்தனர்.

  போத்தனூர் போலீசார் டிடிஎப் வாசனை தேடி வந்த நிலையில் மதுரைக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பாக அவர் சரணடைந்தார். நேற்று முன்தினம் காலை 10.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நீதிமன்ற கூண்டில் டிடிஎப் வாசன் அமர வைக்கப்பட்டிருந்தார்.

  பின்னர் இரண்டு நபர் உத்தரவாதம் அளித்த  பின்  மாலையில் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். போத்தனூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் டிடிஎப்  வாசன் ஜாமின் பெற்ற நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் ஜாமின் பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

  இந்நிலையில், செய்தி ஊடகங்களுக்கு எச்சரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை டிடிஎஃப் வாசன் வெளியிட்டுள்ளார். அதில்,  எனது பவர் தெரியாமல் நியூஸ் சேனல்ஸ் விளையாடிட்டு இருக்கிங்கனு கேட்க தோணுது.. ஆனா, கேட்க மாட்டேன். சுமூகமா போயிடலாம்னுதான் நான் இருக்கேன். நியூஸ் சேனல்ஸ் பார்த்து பயம் கிடையாது, யாரை பார்த்தும் பயம் கிடையாது.

  எல்லாத்துக்குமே ஒரு எல்லை இருக்கு. நீங்க எல்லையை கடந்து செல்கிறீர்கள்.. அதுக்கும் மேல போன, எல்லா யூ டியூபர்ஸும் சேர்ந்து உங்களை பத்தி பேச வேண்டி இருக்கும். எனவே, கட்டுப்பாடுடன் இருந்துகோங்க... இது மிரட்டலெல்லாம் கிடையாது’ என கூறியுள்ளார்.

  மேலும், பப்ஜி மதன் உட்பட பல யூ டியூபர்கள் குறித்து மீடியாவில் செய்தி வெளியிட்டுள்ளனர். அடுத்தது உங்களை பற்றியும் செய்தி வெளியாகலாம் என யூ டியூபர்ஸுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Coimbatore, Threatening, Video