Home /News /tamil-nadu /

திருப்பதியில் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரி அத்துமீறல்...!

திருப்பதியில் எம்.பி சசிகலா புஷ்பாவிடம் தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரி அத்துமீறல்...!

திருப்பதியில் சசிகலா புஷ்பா

திருப்பதியில் சசிகலா புஷ்பா

  • News18
  • Last Updated :
    CAA & NRC ஆகிய சட்டங்கள் இந்திய நாட்டின் இன்றியமையாத தேவை என்று மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா திருப்பதி மலையில் பேட்டியளித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த அதிமுக மாநிலங்களவை உறுப்பினர், சசிகலா புஷ்பா இன்று காலை வழிபட்டார்.

    பின்னர் கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச அளவில் எதையும் செய்யக்கூடிய வல்லமை மிக்கவராக இருக்கிறார். CAA & NRC ஆகிய சட்டங்கள் இந்திய நாட்டின் இன்றியமையாத தேவைகள் ஆகும். இந்த சட்டங்கள் மூலம் ஊடுருவல்வாதிகளை நாட்டில் இருந்து வெளியேற்ற முடியும்.

    சசிகலா புஷ்பா


    குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் நல்ல ஒரு முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதில் இருந்து பின்வாங்காது என்று நான் நம்புகிறேன். குடியுரிமை திருத்த சட்டத்தின் காரணமாக இந்திய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என்று கூறினார்.

    இதற்கிடையே, சாமி தரிசனத்திற்காக நேற்று சசிகலா புஷ்பா திருப்பதி மலைக்கு வந்தபோது, மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில், தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் சசிகலாவை, எம்.பி என்றும் பாராமல் கீழ்தரமாக நடத்தியதாக தெரியவந்துள்ளது.

    அங்கு நடைபெற்ற சம்பவங்களை சசிகலாவின் பாதுகாவலர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்த போது, அந்த செல்போனையும் விஜிலன்ஸ் ஊழியர்கள் பிடுங்கி வைத்து கொண்டனர்.

    தொடர்ந்து அலிபிரி சோதனை சாவடியில் விஜிலன்ஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சசிகலா புஷ்பா, திருப்பதி மலைக்கு சென்ற பின்னர், மேல் அதிகாரிகள் எடுத்த சில நடவடிக்கைகள் காரணமாக, விஜிலென்ஸ் துறை அதிகாரிகள் சசிகலா, இருந்த அறைக்கு சென்று மன்னிப்பு கேட்டு செல்போனை அவரிடம் ஒப்படைத்ததாக
    தெரியவந்துள்ளது.

    இன்று சசிகலா புஷ்பா பேட்டியளித்தபோது விஜிலன்ஸ் அதிகாரிகளின் செயல் குறித்த கேள்விக்கு, நான் சாமி கும்பிடுவதற்காக வந்து இருக்கிறேன் என்று ஒற்றை வரியில் பதிலை முடித்துக் கொண்டார்.

    சசிகலா புஷ்பாவின் பதவிக்காலம் வரும் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது குறிப்பிடத்தக்கது.
    Published by:Sankar
    First published:

    Tags: Sasikala Pushpa

    அடுத்த செய்தி