கொரோனா மருத்துவமனையாக மாறிய திருப்பதி பத்மாவதி கல்லூரி: மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.19 கோடி நிதி!

திருப்பதியில் உள்ள தேவஸ்தான சத்திரங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொரோனா மருத்துவமனையாக மாறிய திருப்பதி பத்மாவதி கல்லூரி: மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.19 கோடி நிதி!
கோப்புப் படம்
  • Share this:
திருப்பதியில் உள்ள பத்மாவதி மருத்துவ கல்லூரி, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் தேவையான உபகரணங்கள் வாங்க, தேவஸ்தானம் 19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

வென்டிலேட்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க பணம் தேவை என்று மருத்துவக் கல்லூரி நிர்வாகம் கேட்டிருந்த சூழலில் அதனை ஏற்று நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா அச்சறுத்தல் நேரத்தில், ஏழைகளுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தினமும் 50,000 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது.

இதைத் தவிர கொரோனா தொற்றியவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, திருப்பதியில் உள்ள தேவஸ்தான சத்திரங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றையும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.


Also see...
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading