தமிழகத்தில் மண்டல வாரியாக நதிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
நாகர்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் முனியசாமி மற்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொது நல மனுவில், பேச்சிப்பாறை நீர்த்தேக்கம், பெருஞ்சாணி அணை, உள்ளிட்ட 11 அணைகளை தூர்வார உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் N.கிருபாகரன், S.S.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழகத்தின் முக்கிய அணைகள் எப்போது கடைசியாக தூர்வாரப்பட்டன? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு புழல், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட 4 நீராதாரங்களை தூர்வாருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அடுத்த மழை காலத்திற்குள்ளாக 25 முதல் 30 சதவீத பணிகள் நிறைவடையும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் மண்டல வாரியாக நதிகளை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து நீதிபதிகள், அணை கட்டப்பட்ட போது அணையின் நீர் தேக்கும் திறன், தற்போது உள்ள அணையின் நீர் தேக்கும் திறன் ஆகியவற்றை ஒரே அலகில் யூனிட்டில் குறிப்பிட்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Also see... த.மா.கா.வின் சைக்கிள் சின்னத்துக்கு சிக்கல்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.