‘உண்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் நடக்கக்கூடிய கரூர் தொகுதி தேர்தலில் உண்மை ஜெயிக்க வேண்டும்’ : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், 234 தொகுதிகளில் முக்கியமாக கவனிக்கப்பட கூடிய தொகுதியாக கரூர் இருந்து வருகிறது. உண்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் நடக்கக்கூடிய இந்தத் தொகுதி தேர்தலில் உண்மை ஜெயிக்கவேண்டும் என்று கூறினார். 

கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் தனது இறுதிக்கட்ட பிரச்சாரத்தில், 234 தொகுதிகளில் முக்கியமாக கவனிக்கப்பட கூடிய தொகுதியாக கரூர் இருந்து வருகிறது. உண்மைக்கும், பித்தலாட்டத்திற்கும் நடக்கக்கூடிய இந்தத் தொகுதி தேர்தலில் உண்மை ஜெயிக்கவேண்டும் என்று கூறினார். 

 • Share this:
  கரூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.  விஜயபாஸ்கர் மீண்டும் கரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் தற்போதைய அரவக்குறிச்சி சட்டமன்ற திமுக உறுப்பினருமான செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.

  ஆகையால் தேர்தல் துவங்கியது முதல் தேர்தல் பிரச்சாரம் இருபுரமும் கலைக்கட்டியது. பல்வேறு இடங்களில் இரண்டு தரப்பிலும் தொண்டர்கள் தாக்கிகொண்டனர். இறுதி கட்ட பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்றது. இறுதி நாளன்று காலை முதல் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அமைச்சர் .

  இந்நிலையில் மாலையில் கோவை சாலை திருமாநிலையூர்,  வையாபுரி நகர், 80 அடி சாலை வரை ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையில் குவிக்கப்பட்டு ஆடல் பாடலுடன் தொண்டர்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக வரவேற்றனர். மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை தலைமையில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

  மேலும் படிக்க...  2 கி.மீ வரை நடந்து இறுதி கட்டப் பிரச்சாரத்தை முடித்தார் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

  அப்போது பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், “234 தொகுதிகளில்  முக்கியமாக கவனிக்க கூடிய தொகுதியாக கரூர் உள்ளது. உண்மைக்கும் பித்தலாட்டத்திற்கும் நடக்கக்கூடிய தேர்தல். மக்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள். உங்களில் ஒருவனாக இருந்து வரும் எனக்கு நீங்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் .
  50,000 வாக்கு வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற செய்ய வேண்டும்.” என பேசினார்.

  செய்தியாளர்: தி.கார்த்திகேயன்,  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: