டீசல் விலையேற்றத்தால் லாரி தொழில் முடக்கம் - GST வரம்பிற்குள் டீசல் விலையை கொண்டுவர கோரிக்கை

Youtube Video

கொரோனா பொதுமுடக்கம் மற்றும் டீசல் விலையேற்றத்தால் மாதம் ஆயிரத்து 500 கோடி ரூபாய் இழப்பை சந்திப்பதாக லாரி உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக ஜிஎஸ்டி வரம்பிற்குள் டீசலை கொண்டுவர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 • Share this:
  நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் கீழ் 5 லட்சம் லாரிகள் பயன்பாட்டில் உள்ளன. கொரோனா இரண்டாம் அலை பரவலால் ஏப்ரல் மாதத்தில் வணிக நிறுவனங்கள், இதர தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டதால் லாரிகள் இயக்கம் முற்றிலும் தடைபட்டது. அத்துடன் சுங்கச்சாவடிக் கட்டணம், உதிரி பாகங்கள், டீசல் விலையேற்றம் போன்றவற்றால் கிடைக்கும் வருவாயில் பாதியை இழக்கும் நிலைக்கு லாரி உரிமையாளர்கள் தள்ளப்பட்டனர். இதன்மூலம் மாதம் 1,500 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திப்பதாக லாரி தொழிலில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

  பொது முடக்கத்தின்போது கச்சா எண்ணை விலை சரிவை சந்தித்ததால், எண்ணெய் நிறுவனங்கள் டீசல் விலையைக் குறைக்கும் என லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்திருந்தனர்.

  Also read : பெண்களை இழிவுபடுத்தும் விதமாக நான் பேசினேன் என்று அன்புமணி கூறுவது தவறு - திண்டுக்கல் லியோனி விளக்கம்

  ஆனால், தற்போது டீசல் விலை லிட்டருக்கு 94 ரூபாயை கடந்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ஒரு லிட்டர் டீசல் 66.39 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது சுமார் 28 ரூபாய் உயர்ந்துள்ளது. எனவே, ஜிஎஸ்டி வரம்பிற்குள் டீசலை கொண்டு வர வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

   

  தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கி, மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பும்போதுதான் லாரித் தொழிலும் பழைய நிலையை அடையும். அதுவரையில் லாரித் தொழிலைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே லாரி உரிமையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: