தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி நேருக்கு நேர் மோதல் : பெண் காவலர் உயிரிழப்பு

தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி நேருக்கு நேர் மோதல் : பெண் காவலர் உயிரிழப்பு

பெண் காவலர் மாலதி

தேர்தல் பறக்கும் படையினரின் கார் மீது லாரி மோதியதில் பெண் காவலர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார்.

 • Share this:
  வேலூர் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பி.கே.புரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் குடியாத்தம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது குடியாத்தத்தில் இருந்து காட்பாடி நோக்கிச் சென்ற லாரி பறக்கும் படையினரின் கார்  மீது நேருக்கு நேர் மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

  காரில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலைய பெண் காவலர் மாலதி( 37)  சம்பவ இடத்திலேயே  தலை நசுங்கி  உயிரிழந்தார். மேலும் காரில் இருந்த மற்ற மூவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

  மேலும்  மாலதியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், டிஐஜி காமினி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் கே.வி.குப்பம் காவல்துறையினர் தப்பியோடிய லாரி டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

  செய்தியாளர் : எஸ்.பி.கோபி

  வேலூர் மாவட்டம்
  Published by:Sheik Hanifah
  First published: