• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைக்கு சம்பந்தமே இல்லாமல் திரிபுராவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகின்றனர்: திருமாவளவன் கண்டனம்

வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைக்கு சம்பந்தமே இல்லாமல் திரிபுராவில் இஸ்லாமியர்கள் தாக்கப்படுகின்றனர்: திருமாவளவன் கண்டனம்

திருமாவளவன்

திருமாவளவன்

திமுக, மதிமுக சார்பில் ஏன் யாரும் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, இடது சாரிகள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர்களை அழைத்தோம்.எளிதில் தொடர்பு கொள்ள முடியாததால் திமுக, மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

  • Share this:
    வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைக்கு சம்பந்தமே இல்லாமல் திரிபுராவில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு இதனை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

    திரிபுராவில் இடதுசாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து விசிக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டுமல்லாது  காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட்  போன்ற கட்சிகளும் கலந்துகொண்டன.

    இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ‘பாஜக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து திரிபுராவில் சமூக அமைதி இல்லை. கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்த பாஜகவினர் தற்போது இசுலாமியர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறைக்கு சம்பந்தமே இல்லாமல் திரிபுராவில் வன்முறை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த வன்முறை சம்பவங்களை மத்திய அரசு அரசு கைக்கட்டி வேடிக்கை பார்த்து மறைமுகமாக ஊக்குவிக்கிறது என்று திருமாவளவன் தெரிவித்தார்.

    திமுக, மதிமுக சார்பில் ஏன் யாரும் பங்கேற்கவில்லை என்ற கேள்விக்கு, இடது சாரிகள், இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர்களை அழைத்தோம். உடனடியாக தொடர்பு கொள்ள முடிந்ததால் காங்கிரஸ் கட்சியை அழைத்தோம். எளிதில் தொடர்பு கொள்ள முடியாததால் திமுக, மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை என்று திருமாவளவன் விளக்கம் அளித்தார்.

    இதையும் படிங்கள்: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்- பொதுமக்களுக்கு வெகுமதி அறிவிப்பு

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: