துப்பாக்கி சுடுதலில் சர்வேதச சாதனையாளர் நெற்றியில் சுட்டு தற்கொலை

நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை என்றும், தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் சசிக்குமார் தகராறு செய்துள்ளார்.

  • News18
  • Last Updated: January 18, 2020, 11:40 AM IST
  • Share this:
துப்பாக்கி சுடுதல் போட்டியில் பல பதங்கங்களை வென்ற திருச்சியை சேர்ந்த சசிக்குமார் நெற்றியில் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் விமானநிலையம் அருகே உள்ள சந்தோஷ் நகரை சேர்ந்தவர்கள் நல்லத் தம்பி-ரெஜினா தம்பதி. இந்த தம்பதியின் 31 வயது மகன் சசிக்குமார் அதே பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சி கிளப் ஒன்றை நடத்திவருகின்றார்.

சசிக்குமார் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அனுமதியுடன் மூன்று துப்பாக்கிகளுக்கு அனுமதி பெற்று துப்பாக்கி பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளார். 31 வயது ஆகிய நிலையில் திருமணம் ஆகாததால் பெற்றோர் சசிக்குமாருக்கு பெண் பார்த்துவந்துள்ளனர்.


இந்நிலையில் ஒரு வரனை பார்த்து முடிவு செய்த சசிக்குமாரின் பெற்றோர், பெண் வீட்டாருடன் பேசி திருமணம் முடிவு செய்துள்ளனர். ஆனால், நிச்சயிக்கப்பட்ட பெண்ணை தனக்கு பிடிக்கவில்லை என்றும், தற்போது தனக்கு திருமணம் வேண்டாம் என்று பெற்றோரிடம் சசிக்குமார் தகராறு செய்துள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை தனது திருமணம் குறித்து சசிக்குமார் தாயுடன் பேசிக்கொண்டிருக்கும் போது மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது. ஆத்திரம் அடைந்த சசிக்குமார் தனது அறைக்கு சென்று பயிற்சிக்காக வைத்திருந்த துப்பாக்கியால் நெற்றியில் வைத்து சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கதவை உடைத்து உள்ளே சென்ற குடும்பத்தினர் சசிக்குமார் சடலமாக கிடந்ததைப்பார்த்து கதறி அழுதனர். உடற்கூராய்விற்காக சசிக்குமாரின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய விமான நிலைய போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.துப்பாக்கி சுடுதலில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் தனது வாழ்க்கையை தொடங்கிய இளைஞர் சசிக்குமாரின் மரணம், அப்பகுதியில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
First published: January 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்