உலக பிரியாணி தினத்தையொட்டி அதிரடி சலுகை - திருச்சியில் 10 பைசாவுக்கு பிரியாணி விற்பனை
World Briyani Day | உலக பிரியாணி தினத்தையொட்டி திருச்சியில் பிரியாணி கடை ஒன்றில் 10 பைசாவுக்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால், காலை முதலே வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.
- News18 Tamil
- Last Updated: October 11, 2020, 1:33 PM IST
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 11-ம் தேதி உலக பிரியாணி தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்சி தில்லை நகரில் உள்ள பிரியாணி கடையானது, வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக, கவர்ச்சிகரமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. 10 பைசாவுடன் வரும் வாடிக்கையாளர்களுக்கு பிரியாணி வழங்கப்படும் என்பதே அந்த அறிவிப்பு. இதையறிந்த பொதுமக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கிச் சென்றனர்.
மேலும் படிக்க...கடன் தவணை செலுத்துவதில் மேலும் கால அவகாசம் வழங்கப்படாது - ரிசர்வ் வங்கி திட்டவட்டம்
பிரியாணி வாங்கும் ஆர்வத்தில் ஏராளமானோர் குவிந்ததால், சமூக இடைவெளி காற்றில் பறந்தது. எனினும், முதலில் வந்த 100 பேருக்கு மட்டுமே சலுகை விலையில் பிரியாணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் காலை 6 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஐபிஎல் புள்ளிப்பட்டியல்
போட்டி அட்டவணை
இதேபோல் கர்நாடகா மாநிலம் ஹாஸ்கோட் நகரில் உள்ள பிரபல பிரியாணி கடையில், பிரியாணி வாங்குவதற்காக அதிகாலை முதலே மக்கள் திரண்டனர். பிற கடைகளை காட்டிலும் இக்கடைக்கு வாடிக்கையாளர்கள் அதிகம் என்ற நிலையில், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.