கணவரை பழிவாங்க ஃபேஸ்புக்கில் ஆபாசபடங்களை பதிவிட்ட மனைவி... காரணம் என்ன?

பேராசிரியர் கணவரை பழிவாங்க, அவரது புகைப்படத்துடன் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து மார்பிங் செய்து வெளியிட்ட மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.

கணவரை பழிவாங்க ஃபேஸ்புக்கில் ஆபாசபடங்களை பதிவிட்ட மனைவி... காரணம் என்ன?
  • Share this:
திருச்சி பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்த மோகன் ஜெய்கணேஷ், திருச்சி அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தாட்சாயினிக்கும் மோகன் ஜெய்கணேஷுக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

கணவனை பிரிந்து மயிலாடுதுறையில் பெற்றோருடன் வசித்துவந்தாலும், தாட்சாயினி, கணவரிடம் அடிக்கடி செல்போனில் சண்டை போட்டு வந்துள்ளனர். பேராசிரியர் மோகன் ஜெய்கணேஷ் தன் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் முகநூலில் எழுதுவதை வழக்கமாக கொண்டவர். அதேபோல் குடும்பத்தில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள் குறித்தும் பதிவு செய்து வந்திருக்கிறார்.

மேலும் பிரிந்த மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் திருமணத்தின்போது எடுத்த படங்களை முகநூலில் பதிவு செய்து வந்துள்ளார். முகநூல் பதிவை பார்த்து கோபமடைந்த மனைவி தாட்சாயினி அந்தப் படங்களை நீக்குமாறு கூறியுள்ளார் ஆனால் மோகன் ஜெய்கணேஷ், தற்போது வரை நீ என் மனைவிதான், அதனால் உன்னுடன் இருக்கும் படத்தை எனது முகநூலில் பதிவு செய்வதில் என்ன பிரச்னை எனக்கேட்டு, படத்தை நீக்காமல் இருந்துள்ளார்.


இதானல் ஆத்திரமடைந்த தாட்சாயினி தனது புகைப்படத்தை பதிவிடும் அதே முகநூலில், கணவரை அசிங்கப்படுத்த முடிவெடுத்துள்ளார். இதற்காக தனது கல்லூரி கால நண்பரான கட்டுமான தொழில் செய்யும் தஞ்சாவூர் மாவட்டம் சிவாஜி நகரைச் சேர்ந்த 28 வயதான கிருபாகரன் உதவியை தாட்சாயினி நாடியுள்ளார். இருவரும் திட்டமிட்டு பேராசிரியாரான மோகன் ஜெய்கணேசின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட முடிவு செய்துள்ளனர்.

கணவர் மோகன் ஜெய்கணேசின் முகநூல் கணக்கின் பாஸ்வேர்டு தாட்சாயினி தெரிந்து வைத்துள்ளதால், இவர்களது திட்டம் எளிமையாகிவிட்டது. கணவரின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்த தாட்சாயினி, அவர் பதிவிட்டதுபோல சில பெண்களின் ஆபாசப் படங்களை மார்பிங் செய்து பதிவேற்றியுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன ஜெய்கணேஷ் பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.விசாரணையில், தாட்சாயினியும், கிருபாகரனும் திட்டமிட்டு ஆபாச மார்பிங் புகைப்படங்களை பேராசிரியர் முகநூல் கணக்கில் பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி, தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் தாட்சாயினியின் நண்பர் கிருபாகரனை போலீசார் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தாட்சாயினியை போலீசார் தேடி வருகின்றனர்.

ஈகோ சண்டையில் கணவரை அவமானப்படுத்த திட்டமிட்டு அவர் பதிவேற்றிய மார்பிங் ஆபாச படமே அவரை குற்றவாளியாக மாற்றியுள்ளது.

 
First published: June 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading