Tamilnadu Assembly Election 2021 | ஆட்சி மாற்றம் உறுதி என்று கூறி வாக்களித்தார் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு

Tamilnadu Assembly Election 2021 | ஆட்சி மாற்றம் உறுதி என்று கூறி வாக்களித்தார் திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளர் கே.என்.நேரு

வாக்களித்தார் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு

திருச்சி தில்லை நகரில் திமுக முதன்மைச் செயலாளரும் திருச்சி மேற்கு வேட்பாளருமான கே.என்.நேரு வாக்களித்தார்.

  • Share this:
தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணி அதற்கான வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.  திருச்சியில் தில்லை நகரில் திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மேற்கு திமுக வேட்பாளருமான கே.என்.நேரு சரியாக 7 மணியளவில் வாக்களித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி” என்றும் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

மேலும், அனைத்து இடங்களிலும் திமுகவிற்கு மக்களின் ஆதரவு பெரியளவில் உள்ளது. அதனால் திமுக ஆட்சியை கண்டிபாக பிடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.



மேலும் படிக்க...வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்லும் போது முகக்கவசம் கட்டாயம்...

இதற்கிடையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வது பற்றியும், ஆபாசமாக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதால் கே.என் நேரு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: