Home /News /tamil-nadu /

வீர சக்ரா விருது பெற்ற முதல் தமிழர் மதலை முத்துவுக்கு நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை

வீர சக்ரா விருது பெற்ற முதல் தமிழர் மதலை முத்துவுக்கு நினைவுச் சின்னம் அமைக்க கோரிக்கை

வீர சக்ரா விருது பெற்ற முதல் தமிழர் மதலை முத்து.

வீர சக்ரா விருது பெற்ற முதல் தமிழர் மதலை முத்து.

இராணுவ வீரர் மதலைமுத்துவுக்கு திருச்சியில் சிலையுடன் கூடிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்கிற நீண்ட கால கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சிறுதையூர் பகுதியைச் சேர்ந்தவர் மதலை முத்து. ரயில்வே கடைநிலை ஊழியராக பணியைத் தொடங்கி ராணுவப் பணியில் சேர்ந்தார். கடந்த 1965ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போரின்போது, மேற்கு வங்க எல்லையில் கலாய்குண்டாய் விமானப் படைத் தளத்தில் மதலை முத்து பணியில் இருந்தார்.

அப்போது வெடி குண்டுகளுடன் இந்திய ராணுவ தளவாடங்களை அழிக்க வந்த பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்தினார். இதன் மூலம் அப்போதைய மதிப்பில் சுமார் ₹ 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய தளவாடங்கள் பாதுகாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.

இதற்கு மதலை முத்துவின் துணிச்சலான செயலே காரணம்.  தன் உயிரையுப்பற்றி கவலைப்படாமல், அசாத்திய துணிச்சலுடன் பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய மதலைமுத்துவின் வீரத்தை எடுத்துச் சொல்லும் வகையில், மேற்கு வங்கம் கலாய்குண்டாய், காஷ்மீர் மாநிலம் பதான்கோட், பெங்களூரு, ஒடிசா என ராணுவத் தளங்களில் மதலைமுத்துவின் வீரத்தைப் போற்றி மார்பளவு சிலை, நுழைவாயில்கள், போர் நினைவுச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இளம் ராணுவ வீரர்களுக்கு மதலை முத்துவின் வீரம் இன்றைக்கும் பாடமாக உள்ளது. மேலும் மதலை முத்துவை பாராட்டி வீர சக்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். வீர சக்ரா விருது பெற்ற முதல் தமிழர் என்கிற கூடுதல் சிறப்பையும் பெற்றார். இவ்வளவு சிறப்பு பெற்ற மதலைமுத்து எழுதப் படிக்க தெரியாதவர். ராணுவத்திலிருந்து பணி ஓய்வு பெற்றதும் ஓய்வூதியம் கூட பெறாமல் சர்க்கரை ஆலையில் பணியாற்றி, உடல் நலக்குறைவால் இறந்து விட்டார் (1981ல்) என்கின்றனர் குடும்பத்தினர்.

Also read: சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு - பெண்களுக்கு சொத்தில் உரிமை வழங்கும் தீர்ப்புக்கு முதல்வர் வரவேற்பு

இந்நிலையில், கடந்த 1966ம் ஆண்டு லால்குடி ரயில் நிலையத்தில் மதலைமுத்துவை கவுரவித்து வைக்கப்பட்ட நினைவு கல்வெட்டும் பராமரிப்பின்றி உள்ளது. இந்திய ராணுவத்தால் கொண்டாடப்படும் மதலைமுத்துவின் வீரத்தை இந்த தலைமுறையும் அறியும் வகையில் திருச்சியில் சிலையுடன் கூடிய நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்கிற நீண்ட கால கோரிக்கை கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

இந்திய ராணுவமே நிதியுதவி அளிக்க தயாராக இருந்தும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி சிலையுடன் கூடிய நினைவுச் சின்னம் வைப்பது தவிர்க்கப்படுகிறது. ஆனால், சிறப்பு அனுமதியின் கீழ் சிலைகள் வைக்கப்படுகின்றன என்கிறார் பல ஆண்டுகளாக நினைவுச் சின்னம் அமைக்க முயன்று வரும் மதலைமுத்துவின் மகன் ஜான் மதலைமுத்து. கார்க்கில் போரில் வீரமரணமடைந்த மேஜர் சரவணன் நினைவுச் சின்னம் திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ளது.
Published by:Rizwan
First published:

Tags: Army man, Trichy

அடுத்த செய்தி