திருச்சி என்.ஐ.டியில் உதவிப் பேராசிரியர் வேலை! 134 பணியிடங்கள்

இந்த திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர்(கிரேடு 2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

திருச்சி என்.ஐ.டியில் உதவிப் பேராசிரியர் வேலை! 134 பணியிடங்கள்
திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழகம்
  • News18
  • Last Updated: February 19, 2019, 1:30 AM IST
  • Share this:
திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர் பணிக்கு 134 பணியிடங்களுக்கு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேசிய தொழில்நுட்ப கல்வி மையங்கள் சுருக்கமாக என்.ஐ.டி எனப்படுகிறது. மத்திய கல்வி நிறுவனங்களில் ஒன்றான இதன் கிளை திருச்சியிலும் செயல்படுகிறது. தற்போது, இந்த திருச்சி என்.ஐ.டி கல்வி நிறுவனத்தில் உதவி பேராசிரியர்(கிரேடு 2) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 134 பேர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணபிக்கத் தகுதியானவர்கள். குறிப்பிட்டப் பாடப்பிரிவில் முதுகலைப் படிப்புடன் முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 500 ரூபாயும் மற்ற பிரிவினர்கள் 1,000 ரூபாயும் செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கத் தேவையில்லை.

இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் 28-2-2019. இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு https://www.nitt.edu/ என்ற இணையத்தில் பார்க்கலாம்.

Also see
First published: February 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading