பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக போற்றப்படுவது,
திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர்- அகிலாண்டேஸ்வரி கோயில். யானை வழிப்பட்டு முக்தி பெற்ற தலம் என்பதால் 'திருஆனைக்கா' என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க இக்கோயிலில், அகிலா என்ற யானை அன்றாட இறைப்பணிகளை செய்து வருகிறது.
சிறிய வயதிலேயே இக்கோயிலுக்கு வந்த அகிலா, தனது சுட்டித் தனத்தால் பக்தர்களின் மனம் கவர்ந்த யானையாக விளங்குகிறது. இந்த யானையின் பிறந்தநாள் ஆண்டுதோறும் பக்தர்களால் கேக் வெட்டி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த, இரண்டு ஆண்டுகளாக அகிலாவின் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், நேற்று அகிலாவின், 20வது பிறந்தநாளையொட்டி, யானைப்பாகன் ஜெம்புநாதனின் ஏற்பாட்டில் கஜபூஜை நடத்தப்பட்டது.வழக்கம் போல கேக் வெட்டப்படவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மாலையில் அகிலாவின் ரசிகர்கள் சிலர், அகிலாவிற்கு பிடித்த பழ வகைகள், காய்கறிகளை குவியல், குவியலாக வழங்கி, அகிலாவின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.