திமுக ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்புதான் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகபொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது உறவினரின் உடல் நலம் குறித்து கேட்டறிய அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் மருத்துவமனைக்கு வந்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அ.தி.மு.க வை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு.தேர்தல் வெற்றி, தோல்வியை கடந்து எங்கள் இலக்கை நோக்கி நாங்கள் பயணம் செய்கிறோம்.
அ.தி.மு.க - அ.ம.மு.க இணையுமா என்கிற யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது’ என்றார்.
இதையும் படிங்க: பழனிசாமி என்னும் சர்வாதிகாரி கையில் அதிமுக - சசிகலாவால் மட்டுமே மீட்க முடியும்: புகழேந்தி!
தொடர்ந்து பேசிய அவர், ‘கொள்கைக்காக என்னுடன் வந்தவர்கள் எல்லாம் என்னுடன் இருக்கிறார்கள். சுயநிலத்திற்காக வந்து விலைபோக கூடியவர்கள் விலை போகிறார்கள். அ.தி.மு.கவை மீட்க வேண்டும் என்பது தான் எங்கள் முயற்சியும் சசிகலாவின் முயற்சியும்’ என்று தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவது குறித்தான கேள்விக்கு உப்பை தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் சட்டப்படி நடவடிக்கைகள் எடுத்தால் சரிதான் என்றும் அவர் கூறினார்.
மேலும் படிக்க: இருமடங்கு சொத்து குவிப்பு... எம்.ஆர்.விஜயபாஸ்கரை துரத்தும் வழக்குகள்
கட்சி தொடங்கியது முதல் எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா என்கிற ஒற்றை தலைமையின் கீழும் சிறைக்கு செல்லும் முன்பு வரை சசிகலா என்கிற ஒற்றை தலைமையில் தான் அ.தி.மு.க இருந்ததாக தெரிவித்த அவர், தற்போது இந்த நிலை மாறியுள்ளது. விரைவில் அது சரியாகும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அரசாணை - மு.க.ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி!
திமுக ஆட்சி குறித்து பேசிய அவர், எதையெல்லாம் எதிர்த்து போராடினார்களோ அதையே திமுக அரசு தற்போது செயல்படுத்துகிறது. அவர்கள் சொன்னதை மறந்து அவர்களே செயல்படுகிறார்கள்.தி.மு.க ஆட்சியில் மகிழ்ச்சியை விட சிரிப்பு தான் உள்ளது என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: AMMK, Sasikala, TTV Dhinakaran