Exclusive | கண்டுகொள்ளப்படாத விதிமீறல் கட்டடங்கள் - பேராபத்தை தடுக்குமா திருச்சி மாநகராட்சி..?

திருச்சி மாநகர பகுதிகளில் அதிகரித்துவரும் விதிமீறல் கட்டடங்கள் ஆபத்தை விளைவிக்கும் முன்னர், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது

Exclusive | கண்டுகொள்ளப்படாத விதிமீறல் கட்டடங்கள் - பேராபத்தை தடுக்குமா திருச்சி மாநகராட்சி..?
திருச்சி மாநகராட்சி
  • News18
  • Last Updated: July 31, 2020, 3:58 PM IST
  • Share this:
திருச்சி மாநகராட்சியானது 4 கோட்டங்கள், 65 வார்டுகள், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை, பெரிய வணிக வளாகங்கள் என நிறைந்து விரிந்துள்ளது. புதிய கட்டுமானங்கள் பல வேகமாக நடைபெற்றும் வருகின்றன.

இந்நிலையில், விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாக உறையூரில் உள்ள தனியார் மருத்துவ பரிசோதனை மையத்தை  மாநகராட்சி அதிகாரிகள் அண்மையில்  மூடி சீல் வைத்தனர். மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது. ஆனால், விதிமுறை மீறல் கட்டடங்கள் மீது பாரபட்சமில்லாத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் இப்போது மீண்டும் எழுந்துள்ளன.

குறிப்பாக, சின்ன குடியிருப்புகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை விதிமுறைகளை மீறியும் அனுமதியின்றியும்  கட்டடங்களை கட்டி வருகின்றனர். சில கட்டுமான நிறுவனங்கள் விதிகளை மீறியதை நீதிமன்றமே சுட்டிக் காட்டியும் விதிமீறலைத் தொடர்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டப்படுகிறது. தனியார் கட்டுமான பாதிக்கப்பட்டுள்ள பெல் நிறுவன முன்னாள் ஊழியர் தங்கவேல்.


அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டும் போதே வாகன நிறுத்துமிடம், போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் பார்த்தால்,  மாநகரத்தில் உள்ள பல வணிக நிறுவனங்களுக்கு பார்க்கிங் வசதி என்பது வரைபடத்தில் மட்டுமே இருக்கின்றன; சாலை ஓரங்கள்தான் பார்க்கிங் பகுதியாக இருக்கின்றன.





வரைபடத்தில் மட்டும் வாகன நிறுத்துமிடத்தைக்  காட்டி விட்டு, அதிலும் ஒரு கடை அல்லது வீட்டைக் கட்டி விடுகிறார்கள். இப்படி  திருச்சியில் மட்டும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விதி மீறல் கட்டடங்கள் உள்ளன.  இதனால் போக்குவரத்து நெரிசல் ஒருபுறமிருக்க, சென்னை முகலிவாக்கம் கட்டட விபத்து போன்ற பேராபத்தும் இருக்கிறது என்கிறார் இது குறித்த பொது நல வழக்குகளை தாக்கல் செய்த, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் விபரங்களைப் பெற்ற, சமூக ஆர்வலரான அல்லூர் சீனிவாசன்.

இது குறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்பிரமணியனிடம் கேட்டதற்கு, விதிமீறல் கட்டடங்கள் குறித்து கவனத்திற்கு வந்துள்ளன. தற்போது  கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் தீவர கவனம் செலுத்தி வருவதால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டதும் விதி மீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
First published: July 31, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading