திருச்சி திமுகவில் உட்கட்சிப்பூசலா...? போஸ்டர்களில் கே.என்.நேரு இல்லாததால் சலசலப்பு

அன்பில் மகேஷ், உதய நிதி ஸ்டாலின் மற்றும் கே.என் நேரு

திமுகவின் மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் சூழலில் திருச்சியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களில் அக்கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவின் புகைப்படம் இடம்பெறாதது விவாதமாக மாறியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் கே.என்.நேரு. கட்சி ரீதியாக 2018-ம் ஆண்டு அந்த மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது தெற்கு மாவட்ட செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன்பு அவர் கட்சியின் முதன்மைச் செயலாளராக அறிவிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த திருச்சி மாவட்ட செயலாளர் பொறுப்பு மகேஷ் பொய்யாமொழிக்கு வழங்கப்பட்டது.

இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட அரசியலில் களம் இறங்கியது முதலே இரு தரப்பிற்கும் மெல்ல உரசல்கள் தொடங்கிவிட்டன.கடந்த 2018-ல் கட்சி ரீதியாக திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு என்று 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. தெற்கு மாவட்டச் செயலாளராக கே.என்.நேருவும், வடக்கு மாவட்டச் செயலாளராக காடுவெட்டி தியாகராஜனும் இருந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சி ரீதியாக திருச்சி வடக்கு, தெற்கு, மத்திய என்று 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. வடக்கு மாவட்டச் செயலாளராக தியாகராஜன் தொடர்ந்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளராக, மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்ட பொறுப்பாளராக வழக்குரைஞர் வைரமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.இந்த சூழலில்தான் திருச்சி தெற்கு மாவட்ட மகளிரணி செயலாளராக மூன்றாவது முறையாக நியமிக்கப்பட்டார் முன்னாள் கவுன்சிலர் லீலா. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் கே.என்.நேருவின் புகைப்படம் இல்லை. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தவே இதுகுறித்து நாம் லீலாவிடம் கேட்ட போது தவறு நடந்து விட்டதாகவும் உள்நோக்கம் ஏதும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.இது ஒருபுறமிருக்க அண்மையில் பொன்மலை ரயில்வே பணிமனை முன்பாக நடந்த திமுகவின் ஆர்ப்பாட்டத்திற்கு ஒட்டப்பட்ட போஸ்டர்களிலும் கே.என்.நேருவின் புகைப்படம் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

Also read... கோயில் திருவிழாவில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது வழக்கு

போஸ்டர் விவகாரம் குறித்து திருச்சி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் நாம் கேட்டபோது, கட்சியின் அதிகாரப்பூர்வ போஸ்டரில் கே.என். நேருவின் புகைப்படம் இடம்பெற்றிருந்ததாகக் கூறினார்.முகநூலில் பதிவேற்றப்பட்ட தவறான போஸ்டர் உடனடியாக நீக்கப்பட்டு விட்டதாகவும் கூறிய அவர், தங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவித்தார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுகவில் இதுபோன்று உட்கட்சிப் பூசல்கள் எழுவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியுள்ளது
Published by:Vinothini Aandisamy
First published: