திருச்சியில் இருமடங்காக அதிகரித்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில், 12-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது.

திருச்சியில் இருமடங்காக அதிகரித்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
containment zones
  • Share this:
திருச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 4, 146. இதில் 2, 556 பேர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளனர். மாவட்டத்தில் மொத்த இறப்பு 60 பேரில் 39 பேர் மாநகராட்சிப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் கூடும் காந்தி சந்தை காலவரையற்ற மூடல், பொது முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில், 12-ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 25-ஆக அதிகரித்துள்ளது. காந்தி சந்தையை சுற்றியுள்ள சில்லறை விற்பனைக் கடைகளும் மூடப்பட்டு, அந்த பகுதியும் முற்றிலும் தடை செய்யப்படவுள்ளது.


தொற்று அதிகம் உள்ள பகுதிகளே முற்றிலும் தடை செய்யப்படுகின்றன. உணவு & அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவ சுப்பிரமணியன் நீயூஸ் 18-க்கு தெரிவித்துள்ளார்.
First published: August 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading