• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கல்லூரி மாணவி தற்கொலை... ஆங்கில பாடம் புரியாததால் விபரீத முடிவா?

கல்லூரி மாணவி தற்கொலை... ஆங்கில பாடம் புரியாததால் விபரீத முடிவா?

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

திருச்சியில் ஆங்கில பாடம் புரியாததால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    திருச்சி பாலக்கரை அடுத்த சங்கிலியாண்டபுரத்தை சேர்ந்த ரமேஷின் மகள் லலிதா தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் முதலாமாண்டு பயின்று வந்தார். லலிதா பிளஸ்-2வரை தமிழ் வழியில் பயின்று வந்த நிலையில், பெற்றோர் விருப்பத்திற்கு ஏற்ப கல்லூரியில் ஆங்கில மொழி பாடத்தை தேர்வு செய்துள்ளார்.

    ஊரடங்கு காரணமாக கல்லூரி வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படுவதால் லலிதா ஆன்லைனில் பயின்று வந்துள்ளார். ஒருவாரம் வகுப்பு நடைபெற்ற நிலையில், ஆங்கில பாடத்தை புரிந்து கொள்வதில் சிரமம் இருப்பதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.



    ஆனால், சில வாரங்களில் சரியாகிவிடும் என்று பெற்றோர் நம்பிக்கையூட்டியுள்ளனர். இந்நிலையில், லலிதா நேற்று முன் தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் படிக்க...திருமணத்திற்காக வைத்திருந்த பணத்தை ஏழைகளுக்கு வாரிக் கொடுத்த பாரி

    மாணவி லலிதா கடந்த 2-ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்காமல் இருந்து வந்ததாகவும், உடல்நிலையை காரணம் காட்டி வகுப்பை புறக்கணித்ததாகவும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




    மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

    சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: