’குப்பை கொட்ட சென்றார்... சடலமாக கிடைத்துள்ளார்...’ சிறுமியின் தந்தை வேதனை

திருச்சியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது

’குப்பை கொட்ட சென்றார்... சடலமாக கிடைத்துள்ளார்...’ சிறுமியின் தந்தை வேதனை
சிறுமி சடலம் கிடந்த இடம்
  • News18
  • Last Updated: July 7, 2020, 11:33 AM IST
  • Share this:
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட அதவத்தூர் பாளையம் பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும், 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள முள்ளுக்காட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

நேற்று மதியம் குப்பை கொட்டுவதற்காக சென்ற மாணவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி காவல்துறை கண்காணிப்பாளர், சரக டிஐஜி ஆனி விஜயா நேரில் சென்று சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவி எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

படிக்க: கொரோனா தொற்று பாதிப்பின் புதிய அறிகுறிகள்

படிக்க: குவைத் புதிய சட்டம் - தமிழர்கள் உள்பட 8 லட்சம் இந்தியர்களை வெளியேற்றும் அபாயம்


மாவட்ட எஸ்.பி தலைமையிலான படையினர், சிறுமியின் சடலம் குறித்து போலீசுக்கு தகவல் அளித்த இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு, சிறுமியின் தந்தையும் வந்துள்ளார்.

”வழக்கமாக குப்பைக் கொட்டும் இடத்திற்குத்தான் எனது மகள் குப்பை கொட்ட சென்றார். வீட்டிற்கு வரவில்லையே என்று போய் பார்த்ததும் இப்படி சடலமாக கிடைத்துள்ளாள். வீட்டிலும் பிரச்சினை இல்லை. யார் மீதும் சந்தேகமில்லை” என்று அவர் கூறியுள்ளார்.

பிரேத பரிசோதனை முடிவில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்பது தெரிய வரும்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading