திருச்சி அதவத்தூர் சிறுமி சந்தேக மரணம் வழக்கில் புதிய திருப்பம்

அதவத்தூர் சிறுமி சந்தேக மரணம் வழக்கில் புதிய திருப்பமாக சிறுமியின் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி அதவத்தூர் சிறுமி சந்தேக மரணம் வழக்கில் புதிய திருப்பம்
மாதிரிப் படம்
  • Share this:
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே அதவத்தூர் பாளையத்தில் கடந்த 6ம் தேதி உடல் எரிந்த நிலையில் 14 வயது சிறுமி கண்டெடுக்கப்பட்டார்.

அப்போது உடனடியாக குற்றவாளியைக் கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திருச்சி மண்டல ஐ.ஜி பெயராம், டிஐஜி ஆனி விஜயா, எஸ்.பி ஜியா உல் ஹக் ஆகியோர் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திலும் அதவத்தூரிலும் விடிய விடிய விசாரணை நடத்தினர். தொடர்ந்து 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

சிறுமியின் நண்பர்கள், உறவினர்கள் என 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தினர். கடந்த 7ம் தேதி நடைபெற்ற உடற்கூராய்வில் பாலியல் பலாத்காரம் நடைபெறவில்லை. தீக்காயத்தால் உயிரிழப்பு என்றும் தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்று (174/3  பிரிவின் கீழ்) சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


இந்நிலையில், உடற்கூராய்வு அறிக்கையின் அடிப்படையில், தனிப்படை போலீசார், நிபுணர்களுடன் இறுதி கட்ட விசாரணை நடத்தினர். இதன்முடிவில் சிறுமி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தற்கொலைக்கு தூண்டியதாக சிறுமியின் உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (24) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading