பெரம்பலூர் அருகே உயிருடன் இருக்கும் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் - ஒட்டியது யார்?
பெரம்பலூரில் உயிரோடு இருக்கும் இளம் பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போஸ்டர் ஒட்டியது யார் என்று பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- News18 Tamil
- Last Updated: October 11, 2020, 7:40 AM IST
பெரம்பலூர் நகராட்சி, எளம்பலூர் சாலை, மேட்டுத்தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ்- விஜயலட்சுமி தம்பதியரின் மகள் அம்மு என்கிற ரோஷ்னி, இவருக்கு உறவினரான (தாய் மாமனின் மகன்) ஆத்தூர் காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த வீரராகவன் என்பவருடன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது.இதனையடுத்து கனவர் வீட்டில் ரோஷ்னி வசித்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் பணி நிமித்தம் காரணமாக ஓசூர் சென்ற வீரராகவன் அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனைத்தொடர்ந்து மாமனார்- மாமியாருடன் இருக்க விருப்பமில்லாததால் ரோஷ்னி, கடந்த 7 மாதங்களாக பெரம்பலூரில், உள்ள அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.மேலும் ரோஷ்னிக்கு குழந்தைகள் ஏதும் இல்லாததால் திருமணத்தின் போது வரதட்சணையாக அளித்த நகைகள், பணம் உள்ளிட்ட சீர் வரிசை பொருட்களை வீரராகவனின் பெற்றோரிடம் ரோஷ்னியின் பெற்றோர் திரும்ப கேட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், ரோஷ்னி கடந்த 07.10.2020-ம் தேதி இரவு இயற்கை எய்தி விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வருத்தத்துடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என பெரம்பலூர் நகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... Exclusive | சூரி என்னும் சேப்டர் என் வாழ்வில் முடிந்துவிட்டது - விஷ்ணு விஷால் இதனால் அதிர்ச்சியடைந்த ரோஷ்னியின் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் ரோஷ்னி உயிரோடு தான் இருக்கிறார் என்றும், முன் விரோதம் காரணமாக எவரேனும் பழிவாங்கும் நோக்கில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி இருக்கலாம் என்றும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், ரோஷ்னி கடந்த 07.10.2020-ம் தேதி இரவு இயற்கை எய்தி விட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். வருத்தத்துடன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என பெரம்பலூர் நகர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க... Exclusive | சூரி என்னும் சேப்டர் என் வாழ்வில் முடிந்துவிட்டது - விஷ்ணு விஷால்
அந்த புகாரின் அடிப்படையில், பெரம்பலூர் நகர போலீசார் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ள பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரோடு இருக்கும் இளம் பெண் ஒருவர் இறந்து விட்டார் என கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.