• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகம் முழுவதும் பல சுங்கச்சாவடிகளில் உயர்கிறது கட்டணம் - எவ்வளவு உயரும்... எப்போது அமல்...? விபரம் உள்ளே...

தமிழகம் முழுவதும் பல சுங்கச்சாவடிகளில் உயர்கிறது கட்டணம் - எவ்வளவு உயரும்... எப்போது அமல்...? விபரம் உள்ளே...

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழகம் முழுவதும் உள்ள பல சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது

  • Share this:
திருச்சி, சமயபுரம், பொன்னலம்பலப்பட்டி, திருப்பராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை உள்ளிட்ட தமிழ்நாடு முழுக்க பல்வேறு சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணத்தை அதிகரிக்க போவதாக நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த கட்டண உயர்வு, செப்டம்பர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தியமைக்கப்பட்ட கட்டண விபரத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.  திருச்சியில் 8 சுங்கச் சாவடிகளில் 6ல் கட்டணம் திருத்தியமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக கார், ஜீப், வேன் உள்ளிட்ட வாகனங்களுக்கு ₹ 10 - 15 உயர்த்தப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

அதேநேரத்தில், இது ஆண்டுதோறும் செய்யப்படும் வழக்கமான நடைமுறைதான் என்று நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: