எவ்வளவு தண்ணீர் வந்தாலும் முக்கொம்பு கொள்ளிடம் தாங்கும் - பொதுப்பணித்துறை

முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் அணை குறித்து பொதுமக்களும், விவசாயிகளும் கவலைப்பட தேவையில்லை என பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

Web Desk | news18
Updated: August 14, 2019, 8:59 AM IST
எவ்வளவு தண்ணீர் வந்தாலும் முக்கொம்பு கொள்ளிடம் தாங்கும் - பொதுப்பணித்துறை
முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் அணை குறித்து பொதுமக்களும், விவசாயிகளும் கவலைப்பட தேவையில்லை என பொதுப்பணித்துறை கூறியுள்ளது.
Web Desk | news18
Updated: August 14, 2019, 8:59 AM IST
எவ்வளவு நீர் வந்தாலும் தாங்கக் கூடிய வகையில் திருச்சி முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் அரைவட்ட தடுப்பு அமைக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் மணி வாசன் தெரிவித்துள்ளார்.

முக்கொம்பு கொள்ளிடம் மேல் அணையில் உள்ள 8 மதகுகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேதம் அடைந்தன. இதனை அடுத்து 387 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய மேலணை கட்டப்பட்டு வருகிறது. அதோடு உடைந்த மதகுகள் அருகே 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணியும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணியை செய்யும் தொழிலாளர்கள்


இதனிடையே மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்தால் முக்கொம்பு கொள்ளிட மேல் அணை தாங்குமா என கேள்வி எழுந்தது. இந்நிலையில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மணிவாசன் முக்கொம்பில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.

முக்கொம்பு கொள்ளிடம் ஆறு


இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், வெள்ளம் ஏற்பட்டாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். அதனால் பொதுமக்களும், விவசாயிகளும் கவலைப்பட தேவையில்லை.

மேலும் நீர் நிலைகள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைப்பெற்று வருகிறது என்றும்  முக்கொம்புவில் கொள்ளிடத்தின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணை 2021 மார்ச் மாதம் நிறைவடையும் என்றும் கூறினார்.
அதனத் தொடர்ந்து பேசியவர், லஷ்கர் எனப்படும் கரை காவலர் காலி பணியிடங்கள் விரைவாக நிரப்பப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...