• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்குக.. திமுகவுக்குள் ஒலிக்கும் குரல்கள்!!

உதயநிதிக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்குக.. திமுகவுக்குள் ஒலிக்கும் குரல்கள்!!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதியின் நடவடிக்கையை பொறுத்து எதிர்காலத்தில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் அணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டுமென்று தூத்துக்குடி, திருச்சி மாவட்ட திமுக சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

திமுகவைப் பொறுத்தவரை இளைஞர் அணிக்கு என தனி பெருமையும், முக்கியத்துவமும் உண்டு.

திமுகவில் தலைவர் பதவிக்கு அடுத்து அதிக கவனம் பெற்றதும் இந்த இளைஞர் அணிதான். இந்த அணியின் செயலாளராக நீண்ட காலம் இருந்த மு.க.ஸ்டாலினுக்கு பிறகு சாமிநாதன் பதவி வகித்து வருகிறார். கடந்த காலங்களில் திமுகவுக்கு வாக்கு சேகரித்து வந்த மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி மறைவுக்கு பிறகு மு.க.ஸ்டாலின் சந்தித்த முதல் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு தோள் கொடுத்து தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார்.

நடிகர் என்ற முறையிலும், கலைஞரின் பேரன் என்ற முறையிலும் உதயநிதியை பார்க்க ஒரு கூட்டம் பிரசாரத்திற்கு திரண்டு கொண்டே இருந்தது. புன்னகை மாறாத எளிய பேச்சுக்களால் மக்களை கவர்ந்த உதயநிதி, கட்சியின் மூத்த தலைவர்களுக்காக பிரசாரம் செய்யும் அளவுக்கும் தன்னை உயர்த்தி கொண்டார். நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றதில் உதயநிதி ஸ்டாலினின் பிரசாரம் மிக முக்கியமான காரணமாகப் பல மாவட்ட செயலாளர்களால் முன் வைக்கப்பட்டது.

கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற திமுக புதிய எம்.பி.க்கள் கூட்டத்திலும் உதயநிதிக்கு கட்சியில் பொறுப்பு வழங்க வேண்டுமென திமுக நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

இதற்கிடையே திருச்சியில் நேற்று நடைபெற்ற திமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில், உதயநிதிக்கு இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்க வேண்டுமென வலியுறுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் இன்று திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் உதயநிதிக்கு பொறுப்பு வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

உதயநிதியின் நடவடிக்கையை பொறுத்து எதிர்காலத்தில் பொறுப்பு வழங்கப்படலாம் என்று திமுக எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்

திருச்சி, தூத்துக்குடி திமுக மாவட்ட சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு தீர்மானங்களும் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் மூலமாகவும், கட்சியில் இருந்து எவ்வித எதிர்ப்பு இல்லாததாலும் இளைஞர் அணி செயலாளர் பதவி உதயநிதிக்கு தற்போது வழங்கப்படாவிட்டாலும் எதிர்காலத்தில் வழங்கப்படுவது உறுதியாகி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: