விசிகவினர் தாக்குதலில் காயமடைந்த நியூஸ் 18 செய்தியாளரிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்!

தாக்குதலில் ஈடுப்பட்ட கட்சியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருமாவளவன் கூறினார்.

விசிகவினர் தாக்குதலில் காயமடைந்த நியூஸ் 18 செய்தியாளரிடம் வருத்தம் தெரிவித்த திருமாவளவன்!
திருமாவளவன் - நியூஸ் 18 செய்தியாளர் கலைவாணன்
  • News18
  • Last Updated: April 20, 2019, 10:27 AM IST
  • Share this:
அரியலூரில் பொன்பரப்பியில் நேற்று நடைபெற்ற வன்முறையில் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் கலைவாணன் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை சந்தித்து  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வருத்தம்  தெரிவித்துள்ளார். 

மக்களவை தேர்தலையொட்டி, அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் வாக்குப்பதிவு மையத்தின் அருகே விசிக, சின்னமான, பானையை பாமகவினர் சிலர் கீழே போட்டு உடைத்ததாக கூறப்படுகிறது.

இதற்கு, அக்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபடவே, கைகலப்பாக மாறியது.


இதையடுத்து, பாமகவை சேர்ந்த ஒரு கும்பல், மற்றொரு சமூகம் மக்கள் வசிக்கும் காலனி பகுதிக்கு சென்று கண்ணில் பட்டவர்களை உருட்டுக் கட்டையால் தாக்கியதுடன், 20-க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளை அடித்து, நொறுக்கியுள்ளது. இதில் விசிக-வினருக்கும் பாமக-வினருக்கும் இடையே மோதல் முற்றியது.

இதனிடையே,  அப்பகுதியில் செய்தி சேகரிக்கச் சென்ற கலைராஜன் ( நியூஸ் 18 செய்தியாளர்) உள்ளிட்டோர் மீதும் விசிகவினர் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நியூஸ் 18 கலைவாணனுடன் பேசிக்கொண்டிருக்கும் திருமாவளவன்
இந்நிலையில், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செய்தியாளர் கலைவாணனைச்  விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர்  தாக்குதலுக்கு வருத்தமும் கோரினார். மேலும்  தாக்கிய கட்சியினர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

Also see.. Photos | தமிழகத்தில் வெயிலின் தாக்கத்தில் தவித்தவர்களை குளிர்வித்த திடீர் மழை!


Also see... பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு வேண்டும் - திருமாவளவன்

Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 20, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading