ஊரடங்கில் ஊர்ப்பணி - அரசை எதிர்பார்க்காமல் 18 வருட பழைய சாலையை சீர் செய்த இளைஞர்கள்

18 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையை அதிகாரிகள் பழுதுபார்க்காததால் இளைஞர்களே பழுதுபார்த்தனர்.

ஊரடங்கில் ஊர்ப்பணி - அரசை எதிர்பார்க்காமல் 18 வருட பழைய சாலையை சீர் செய்த இளைஞர்கள்
சாலையை பழுதுப்பார்க்கும் இளைஞர்கள்
  • Share this:
திருச்சி மாநகராட்சி 39வது வார்டு எட மலைப்பட்டிபுதூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 18 ஆண்டுகளுக்கு  முன்பு போடப்பட்ட தார் சாலை உரிய பராமரிப்பும், புதுப்பிக்கப் படாமலும் இருந்தது.

இதனால் பொது மக்கள் தொடர்ந்து சிரமத்தை அனுபவித்தனர்.  சாலை குண்டும் குழியுமாகி, வாகனங்களில் செல்வோரும் விபத்துக்குள்ளாகினர்.

இதுகுறித்து இப்பகுதியினர்  மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதிகாரிகளைச் சந்தித்து நேரில் வலியுறுத்தியும்  நடவடிக்கை இல்லை. பாதாள சாக்கடைப் பணிகள் நிறைவு பெற்றதும் சாலையை புதுப்பிக்கிறோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், ஆண்டுக்கணக்கில் தொடரும் பாதாள சாக்கடைப் பணிகளும் முடியவில்லை, சாலையையும் புதுப்பிக்கப்படவில்லை. மக்கள் தொடர்ந்து சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இந்நிலையில், கொரோனா பொது முடக்க காலத்தை பயனுள்ளதாக்க முடிவு செய்த இந்த பகுதி இளைஞர்கள், பொது மக்கள் இணைந்து ₹ 100, ₹ 200 தங்களால் இயன்ற பங்களிப்பை அளித்து,  நிதி திரட்டினர்.
 

அதைக்கொண்டு  சாலைகளை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக  இளைஞர்கள் களத்தில் இறங்கி சாலையை செப்பனிட்டனர். கப்பிச் சல்லி, கட்டுமான இடிபாடுகள், சிமெண்ட் கொண்டு சாலையின் குண்டும் குழியை மூடி செப்பனிட்டுள்ளனர்.

Also read... விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது - மருத்துவர் மகிழ்ச்சி

குழிகளில் விழாமல் பாதுகாப்பான பயணத்தை உறுதிபடுத்தியுள்ளனர். கொரோனா பொது முடக்க காலத்தில் இளைஞர்களின் ஆக்கப்பூர்வ முயற்சியை பலரும் பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் நிரந்தர தீர்வாக பாதாள சாக்கடைப் பணிகளை முடித்து, சாலையை முழுமையாக செப்பனிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading