திருச்சியில் பட்டப்பகலில் கடத்தப்பட்ட லாரி: 60 கி.மீ தூரம் துரத்தல்- சினிமாவை மிஞ்சிய காட்சிகள் (வீடியோ)
திருச்சி அருகே சினிமாவை மிஞ்சும் வகையில், லாரியைக் கடத்திச் சென்ற நபரை 60 கிலோ மீட்டர் துாரம் துரத்திச் சென்று போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.
- News18 Tamil
- Last Updated: November 23, 2020, 4:22 PM IST
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த முத்தப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் நாகப்பன். இவர் அரிசி ஆலை வைத்து நடத்தி வருகிறார். இவரது லாரி, சனிக்கிழமை மதியம், ஆலை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மதியம் சாப்பிடச் சென்று விட்டனர். ஆலையில் கணக்குப் பிள்ளை குமார் மட்டும் இருந்துள்ளார். அப்போது திடீரென லாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. ஓட்டுநர் சாப்பிடச் சென்ற நிலையில் யார் லாரியை எடுத்தது என உஷாரடைந்த குமார், தனது பைக்கில் லாரியைத் துரத்தியுள்ளார். லாரி மிக வேகமாக திண்டுக்கல் -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது குமார் லாரியை முந்திச் சென்று பார்த்தபோதுதான் லாரியை அடையாளம் தெரியாத நபர் ஓட்டிச் செல்வது தெரியவந்தது.
லாரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமுத்திரம் வழியாக கிராம சாலையில் சென்றதை அறிந்த குமார் சமுத்திரம் ரெயில்வே கேட்டை லாரி கடந்து செல்ல முயன்ற போது தன்னுடைய இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு, உயிரைப் பணயம் வைத்து லாரியின் பின் பகுதியில் ஏறிக் கொண்டார்.
அங்கிருந்தபடியே, ஆலை உரிமையாளருக்கும் நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தார். மேலும் லாரி செல்லும் பகுதியையும் கூறினார். இதையடுத்து லாரி உரிமையாளர் மற்றும் இளைஞர்கள், ஒரு காரில் ஏறி லாரியைத் துரத்திச் சென்றனர். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீண்டும் வேகமெடுத்து மின்னலென பாய்ந்து கொண்டிருந்தது. விராலிமலை சுங்கச்சாவடியில் லாரியை நிறுத்தி தான் ஆக வேண்டும் என துரத்தியவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, சுங்கச் சாவடியில், தடுப்பையும் உடைத்து விட்டு லாரி பறந்தது.
மேலும் படிக்க...சவுகார்பேட்டை கொலைச் சம்பவம்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ராஜுவ் துபே கைது..
தகவல் அறிந்த மணிகண்டம் காவல்நிலைய போலீசார் வழியில் லாரியை மறிக்க தயார் நிலையில் நின்றனர். போலீசாரைக் கண்ட லாரி ஓட்டுநர், அவர்கள் மேல் மோதுவது போல ஓட்டவும் போலீசார் பயந்து ஒதுங்கியுள்ளனர். அதைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றார்.லாரி உரிமையாளரும், போலீசாரும் லாரியை துரத்தியபடி கார் மற்றும் ஜீப்பில் புயலாக பறக்கத் தொடங்கினர். ஒருவழியாக சுமார் 60 கிலோ மீட்டர் துரத்தலுக்குப் பின்னர் திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே சென்ற போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படவே அந்த நபர் லாரியை நிறுத்தினார்.
சுற்றி வளைத்த போலீசார் அவரைப் பிடிக்க முயன்றபோது போலீசாரைத் தள்ளிவிட்டு எட்டி உதைத்தார். அவரது தாக்குதல்களை மீறி பிடித்த போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர் அதில் லாரியைக் கடத்தியவர் விருதுநகரைச் சேர்ந்த 43 வயதான பிச்சை மணி என்பது தெரியவந்தது.
இதுபோன்று ஆளில்லாத லாரிகளைக் கடத்திச் சென்று அவற்றின் பாகங்களைப் பிரித்து விற்பதுதான் பிச்சை மணியின் தொழில் என்பதும் தெரியவந்தது. பிச்சை மணியை கைது செய்த போலீசார், மீட்கப்பட்ட லாரியை உரிமையாளர் நாகப்பனிடம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல் திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலை, திருச்சி தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை என சுமார் 60 கிலோ மீட்டர் தூரம் லாரியை விரட்டிச் சென்று இளைஞர்கள் மற்றும் போலீசார் உயிரை பனையம் வைத்து பிடித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன. லாரியைப் பிடிக்க உதவிய குமார் உள்ளிட்டோருக்குப் போலீசாரும் பொதுமக்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
லாரி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சமுத்திரம் வழியாக கிராம சாலையில் சென்றதை அறிந்த குமார் சமுத்திரம் ரெயில்வே கேட்டை லாரி கடந்து செல்ல முயன்ற போது தன்னுடைய இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு, உயிரைப் பணயம் வைத்து லாரியின் பின் பகுதியில் ஏறிக் கொண்டார்.
அங்கிருந்தபடியே, ஆலை உரிமையாளருக்கும் நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தார். மேலும் லாரி செல்லும் பகுதியையும் கூறினார். இதையடுத்து லாரி உரிமையாளர் மற்றும் இளைஞர்கள், ஒரு காரில் ஏறி லாரியைத் துரத்திச் சென்றனர். மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி மீண்டும் வேகமெடுத்து மின்னலென பாய்ந்து கொண்டிருந்தது.