மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் - வாய்ப்பைத் தவிர்த்தது திமுக?

தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தல் - வாய்ப்பைத் தவிர்த்தது திமுக?
திருச்சி சிவா
  • News18
  • Last Updated: September 10, 2020, 12:47 PM IST
  • Share this:
மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் வாய்ப்பைத் திமுக தவிர்த்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலங்களவைத் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் சிங் கின் எம்.பி பதவிக்காலம் கடந்த மாதத்துடன் நிறைவு பெற்றதையடுத்து அப்பதவி காலியானது. இந்நிலையில், துணைத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவை பொது வேட்பாளராக்க முடிவு செய்ததாகவும் ஆனால் இந்த வாய்ப்பை திமுக தலைமை மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி உறுதியாக இல்லாத நிலையில் திமுக போட்டியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.


ஆனாலும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் திருச்சி சிவா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also read... தமிழகம் கேரளா இடையே நதிநீர் பங்கீடு தொடர்பாக நாளை இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைநேற்றைய தினம் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் திருச்சி சிவா முக்கிய நிர்வாகிகளுடன் சென்னையில் பங்கேற்கவில்லை. ஒரு மணி நேரம் தாமதமாக திருச்சியில் பங்கேற்றதும் குறிப்பிடத்தக்கது.மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஷ் சிங் மீண்டும் பீகாரில் இருந்து மாநிலங்களவை எம்.பியாக தற்போது மீண்டும் தேர்வாகியுள்ளார். அவரையே துணைத் தலைவர் வேட்பாளராக பா.ஜ.க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 14ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (11ம் தேதி) தொடங்குகிறது. இந்நிலையில் திருச்சி சிவா டில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading