கொரோனா காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது - விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி..
கொரோனா காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறது - விப்ரோ நிறுவனத் தலைவர் அசீம் பிரேம்ஜி..
விப்ரோ அசீம் பிரேம்ஜி கலந்துக்கொண்ட பட்டமளிப்பு விழா
இந்த கொரோனா காலம் பல பாடங்களை நமக்கு தந்துள்ளது. நாட்டில் சமநிலையின்மையும் சம வாய்ப்பின்மையும் இருந்தாலும் மக்களின் தாராள மனதும் தைரியமும் வெளிப்பட்டுள்ளது eன்று விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி கூறியுள்ளார்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக (NIT) 16-வது பட்டமளிப்பு விழா முதல் முறையாக இணைய வழியில் நடைபெற்றது. விப்ரோ நிறுவன தலைவர் அசீம் ப்ரேம்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்த விழாவில் என்.ஐ.டி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், ஆளுநர் குழு தலைவர் பாஸ்கர் பட், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவின் மூலம்,173 பேருக்கு பி.எச்டி பட்டம் உட்பட மொத்தம் 1, 777 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. குறிப்பாக, கடந்த ஆண்டு 98 பேர் பி.எச்டி பட்டம் பெற்ற நிலையில் தற்போது 173 பேருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினரான விப்ரோ நிறுவன தலைவர் அசீம் பிரேம்ஜி பேசுகையில், " கல்வி என்பது தொடர்ச்சியான ஒரு செயல்முறை. அந்தவகையில் கொரோனா காலத்தில் நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். எனது அனுபவத்தில் இருந்து, பட்டதாரிகளுக்கு 5 வழிகாட்டுதல்களை தருகிறேன்.முதலாவதாக, விமர்சன ரீதியிலான சிந்தனை, கேள்வி கேட்கும் திறன், யதார்த்தத்தை உணர்தல், கடின உழைப்பு, சக மனிதர்களுக்கு காட்டும் பரிவு, எல்லாவற்கும் அடித்தளமாக உண்மை, நேர்மை. நம்முடைய செயலில் உண்மையும் நேர்மையும் இருந்தால் அது உறுதியாக நடக்கும்" என்றார்.
மேலும், இந்த கொரோனா காலம் பல பாடங்களை நமக்கு தந்துள்ளது. நாட்டில் சமநிலையின்மையும் சம வாய்ப்பின்மையும் இருந்தாலும் மக்களின் தாராள மனதும் தைரியமும் வெளிப்பட்டுள்ளது. சமநிலையற்ற தன்மையைப் போக்கி தைரியமாக கூட்டாக இணைந்து செயலாற்றும் திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.