காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்... பாலியல் தொழில் கொடூரம்... தஞ்சை தம்பதி அட்டூழியம்

Crime | Tanjore | இளம்பெண் தஞ்சையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்ததும், அங்கு அவருக்கு துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் தெரியவந்தது.

  • Share this:
திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி அருகே, காரில் இருந்து இருந்து மர்ம நபர்களால் துாக்கி வீசப்பட்ட 20 வயது இளம்பெண் உடல் முழுவதும் ரத்தக் காயங்கள் இருந்ததால், மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியில் திங்கட்கிழமை காலை 11 மணியளவில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பகுதி வழியாக வந்த வெள்ளை நிறக் கார் ஒன்றில் இருந்து 20 வயது இளம்பெண் ஒருவர் வெளியில் துாக்கி வீசப்பட்டார்; கார் உடனடியாக அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது

அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணின் அருகில் சென்று பார்த்தபோது அவர் உடலில் ரத்தக் காயங்களுடன் நடக்க முடியாத நிலையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாதர் சங்கத்தினர் மற்றும் மக்கள் உதவியுடன் இளம்பெண் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்


மாதர் சங்கத்தினரும் போலீசாரும் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும், அவரது பெற்றோர் பெங்களூருவில் வசிப்பதும், அந்த இளம்பெண் தஞ்சையில் ஒரு வீட்டில் வேலை பார்த்து வந்ததும், அங்கு அவருக்கு துன்புறுத்தல்கள் நடந்ததாகவும் தெரியவந்தது.

இளம்பெண்ணுக்கு வங்க மொழி மட்டுமே தெரிந்த காரணத்தால் அவர் சொல்ல வருவதை போலீசாரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதையடுத்து வங்க மொழி பேசும் காவலர்கள் மூலம் அவரிடம் முழு விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTubeFirst published: June 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading