கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்... ஆறு மாத கர்ப்பிணி சிறுமி தற்கொலை - திருச்சியில் பரபரப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி கர்ப்பமாக்கியவரை காவல்துறையினர் கைது செய்யாததால், ஆறு மாத கர்ப்பிணி சிறுமி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்... ஆறு மாத கர்ப்பிணி சிறுமி தற்கொலை - திருச்சியில் பரபரப்பு
உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி
  • Share this:
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. தனது உறவினரான புதுக்கோட்டை மாவட்டம், ராஜாளிப்பட்டி அருகே உள்ள பகவான்பட்டியைச் சேர்ந்த 22 வயதான ராம்கி என்பவரை காதலித்து வந்துள்ளார்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டிற்கு சென்று பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனால் அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாகியுள்ளார். 6 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பெற்றோருக்கு தகவல் தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதை அடுத்து உறவினரான ராம்கிக்கே மகளை திருமணம் செய்து வைத்துவிடலாம் என பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.


இது தொடர்பாக ராம்கி வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் சிறுமியின் பெற்றோர் பேசியுள்ளனர். திருமணத்திற்கு முன்னரே கர்ப்பமான பெண்ணை, தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடியாது என்று கூறிய ராம்கியின் பெற்றோர், சிறுமியின் பெற்றோரை தரக்குறைவாக பேசி அனுப்பியுள்ளனர்.

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் ராம்கி மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் ராம்கி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த மே மாதம் 29 ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை அவரை கைது செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சிறுமி, பெற்றோருடன் மணப்பாறை மகளிர் காவல் நிலையம் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் மணப்பாறை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிருந்தா பேச்சுவார்த்தை நடத்தினார். ராம்கியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை அடுத்து போராட்டத்தை சிறுமி கைவிட்டார். அதன்பிறகும், ராம்கி கைது செய்யப்படாதநிலையில், சிறுமி தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
First published: July 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading