ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஆபாச ஆடியோ விவகாரம் : பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா சஸ்பெண்ட் - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

ஆபாச ஆடியோ விவகாரம் : பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா சஸ்பெண்ட் - அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு திருச்சி சூர்யா பணியாற்றலாம் என அண்ணாமலைவெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஆபாசமாக பேசி ஆடியோ வெளியான விவகாரத்தில் பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யா பாஜகவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

  பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் குழு முன்பு ஆஜராகினர்.

  பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், பிரச்சனையை சுமுகமாக முடித்துக் கொண்டதாக தெரிவித்தனர். இருவருக்கும் குடும்ப ரீதியான நட்பு இருப்பதாக கூறிய அவர்கள், அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் திருச்சி சூர்யா எனக்கு தம்பி மாதிரி என்றும் டெய்சி எனக்கு அக்கா மாதிரி இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

  இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு : பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

  இந்த நிலையில் பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யா 6 மாத காலத்திற்கு பாஜகவில் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருவரும் சுமூகமாக செல்ல விரும்பினாலும் தொலைபேசி உரையாடy; சரி என்று நாமே ஒப்புக்கொள்வதை போல் ஆகிவிடும்.

  பெண்களை இழிவுபடுத்துவதை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் சுமூகமாக சென்றுவிட்டோம் என்று சொன்னலும் அதை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக நான் ஏற்க மறுக்கிறேன் என்றார். நற்பண்புகளுடன் நூற்றுக்காணக்கான் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பதே என் விருப்பம் ஆதலால் ஒரு மாநில தலைவராக சில கடின முடிவுகளை எடுக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.

  இதனால் பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யா கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதை அவர் ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 6 மாதம் காலத்திற்கு நீக்கப்படுகிறார். கட்சியின் ஒரு தொண்டனாக கட்சியின் வளர்ச்சிக்கு அவர் பணியாற்றலாம் என அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Annamalai, BJP