முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திருச்சி சூர்யா எனக்கு தம்பி மாதிரி... டெய்சி எனக்கு அக்கா மாதிரி.. ஆடியோ விவகாரத்தில் கூட்டாக பேட்டியளித்த டெய்சி, சூர்யா

திருச்சி சூர்யா எனக்கு தம்பி மாதிரி... டெய்சி எனக்கு அக்கா மாதிரி.. ஆடியோ விவகாரத்தில் கூட்டாக பேட்டியளித்த டெய்சி, சூர்யா

செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய சூர்யா மற்றும் டெய்சி

செய்தியாளர்களிடம் கூட்டாக பேசிய சூர்யா மற்றும் டெய்சி

திருச்சி சூர்யா சிவா எனக்கு தம்பி மாதிரி என இனி சுமூகமாக தொடருவோம் என கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

செல்போனில் வாக்குவாதம் செய்ததுடன், ஆபாசமாக பேசிய விவகாரம் சுமுகமாக முடித்துக் கொள்ளப்பட்டதாகவும், பாஜக-வுக்கு களங்கம் ஏற்படுத்தவே ஆளுங்கட்சியினர் இதனை பெரிதுபடுத்தியதாகவும் திருச்சி சூர்யாவும், டெய்சியும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாஜக ஓபிசி பிரிவு மாநில துணைத் தலைவர் திருச்சி சூர்யாவும், பாஜக சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் டெய்சியும் செல்போனில் வாக்குவாதம் செய்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, திருச்சி சூர்யா கட்சி நிகழ்வில் பங்கேற்க தற்காலிக தடை விதித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் கனகசபாபதி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தவும் அறிவுறுத்தினார். இதையடுத்து, திருப்பூரில் பாஜக அலுவலகத்திற்கு வந்த திருச்சி சூர்யா மற்றும் டெய்சி ஆகியோர் விசாரணைக் குழு முன்பு ஆஜராகினர்.

இதையும் படிங்க: கட்சியில் இருந்து நீக்கியது ரூபி மனோகரனுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதி- கார்த்தி சிதம்பரம் ஆவேசம்

top videos

     பின்னர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த இருவரும், கட்சியின் மூத்த தலைவர்கள் முன்னிலையில், பிரச்சனையை சுமுகமாக முடித்துக் கொண்டதாக தெரிவித்தனர். இருவருக்கும் குடும்ப ரீதியான நட்பு இருப்பதாக கூறிய அவர்கள், அரசியல் காரணங்களுக்காகவே இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் திருச்சி சூர்யா எனக்கு தம்பி மாதிரி என்றும் டெய்சி எனக்கு அக்கா மாதிரி இருவரும் கூட்டாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Annamalai, BJP, Viral