ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இத்துடன் பாஜக உடனான உறவை முடித்துக்கொள்கிறேன்... திருச்சி சூர்யா பரபரப்பு

இத்துடன் பாஜக உடனான உறவை முடித்துக்கொள்கிறேன்... திருச்சி சூர்யா பரபரப்பு

அண்ணாமலையுடன் திருச்சி சிவா

அண்ணாமலையுடன் திருச்சி சிவா

அடுத்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை, தமிழக பாஜக மாற்ற வேண்டும் என பதிவு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாஜக உடனான தன்னுடைய உறவை முடித்துகொள்வதாக திமுக நாடளுமன்ற உறுப்பினரின் மகன் திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.

சமீபத்தில் திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த வாரம், திருச்சி சூர்யாவை பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார்.

இந்நிலையில் திருச்சி சூர்யா, பாஜக உடனான உறவை முடித்துகொள்வதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.  அதில், அடுத்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை, தமிழக பாஜக மாற்ற வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி என பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Trichy Siva