• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பெண் உயிரிழப்பு!

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் மாடு முட்டியதில் பெண் உயிரிழப்பு!

  • Share this:
    திருச்சி சூரியூர் ஜல்லுக்கட்டுப் போட்டியில் மாடு முட்டியதில் ஜோதிலட்சுமி என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

    பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400க்கும் மேற்றபட் காளைகள் பங்கேற்றன. காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் ரசித்து வந்தனர்.

    இந்த நிலையில் சூரியூர் ஜல்லிக்கட்டு நிகழ்சியில் உறையூர் பகுதியை சேர்ந்த ஜோதிலட்சமி என்ற பெண்னை மாடு முட்டியதில் அவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மீட்டு திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஜோதிலட்சுமி உயிரிழந்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: