ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் அளித்த காயத்ரி ரகுராம்... என்ன விசயம்?

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் அளித்த காயத்ரி ரகுராம்... என்ன விசயம்?

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

அண்ணாமலை - காயத்ரி ரகுராம்

முதலில் உரையாடலைப் பதிவு செய்தவர் நான் அல்ல. அதேபோல் முதலில் இந்த ஆடியோவை மாநில அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நான் கொடுக்கவில்லை - காயத்ரி ரகுராம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சி சூரியா ஆடியோவை தான் வெளியிடவில்லை என்றும் இதனை ஊடகங்களிடம் கசியவிட்டவர்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையால் எளிதாக கண்டுபிடிக்க முடியும் என்றும் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்ததாக கூறி  அக்கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக நிர்வாகி டெஸ்சியை மற்றொரு நிர்வாகியான திருச்சி சூரியா ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திருச்சி சூரியாவை விமர்சித்து காயத்ரி ரகுராம் பதிவிட்டிருந்தார். இந்நிலையில்தான் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  திருச்சி சூரியாவும் 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில்,  காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், சில நேர்காணல்களை பார்த்தேன். திருச்சி சூரியா ஆடியோவை நான் கசியவிட்டதாக மக்களிடம் என்னை கட்டமைக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லச் சொன்னார்களா அல்லது வதந்திகளை நம்புகிறார்களா அல்லது வதந்திகளை உருவாக்குகிறார்களா என்று எனக்கு தெரியாது.

ஆனால் முதலில் உரையாடலைப் பதிவு செய்தவர் நான் அல்ல. அதேபோல் முதலில் இந்த ஆடியோவை மாநில அலுவலகத்தில் உள்ள முக்கிய நபர்களுக்கு நான் கொடுக்கவில்லை. பிரபல ஊடகவியலாளர் ஒருவர் இந்த ஆடியோவை வெகு காலத்திற்கு முன்பே பெற்று உரையாடலைக் கேட்டார் என்று அவர் ஒரு பேட்டியில் வெளிப்படையாக கூறினார்.

மீடியாவுக்கு ஆடியோவை யார் கொடுத்தார்கள் என்பதை அண்ணாமலை கண்டுபிடிப்பது எளிது. சில பிரபல அரசியல் விமர்சகர்கள் இந்த குற்றச்சாட்டுகளை என் மீது கூறி வருகின்றனர். அதற்காக பாஜக மாநில தலைவரிடம் புகார் அளித்துள்ளேன்.

இதையும் படிங்க: 'ஆளுநர் இல்லைனா ஆன்லைன் ரம்மியை ஒழிச்சிருக்கலாம்' - கனிமொழி எம்.பி.

திருச்சி சூரியா ஆடியோவை மீடியாக்களுக்கு கசியவிட்டது யார் என்பதை கண்டுபிடித்து அந்த நபர் மீது மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுப்பார் என உறுதியாக நம்புகிறேன். உண்மைக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும் இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உணர்வு பூர்வமாக ஆதரவளித்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி’ என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Annamalai, BJP, Gayathri Raguramm