டெல்லி காமன்வெல்த் ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 06 முதல் 11ம் தேதி வரை 3-வது நேஷனல் சீக்கிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் திருச்சியை சேர்ந்த சுகித்தா பிஸ்டல்
துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துக்கொண்டு 16வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் முதல்முறையாக தங்கம் வென்றார். தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, பீகார், தெலுங்கானா, சட்டீஸ்கர் உள்ளிட்ட 15 மாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்போட்டியில் ஒரு மணிநேரத்தில் 60 ரவுண்டுகள் இலக்கை நோக்கி சுடவேண்டும். 48 நிமிஷத்தில் இலக்கை நோக்கி சுட்டதுடன் வெற்றிக்கான புள்ளிகளைப் பெற்றதன் அடிப்படையில்
தங்கப்பதக்கம் வென்றார்.
அதேபோல்
தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்ப போட்டியிலும் கலந்து கொண்ட சுகிதா சிலம்ப தனித் திறமையில் ஒரு தங்கம், சிலம்ப சண்டையில் ஒரு தங்கம் மற்றும் சுருள் வீச்சில் ஒரு வெள்ளி என மொத்தம் மூன்று தங்க பதக்கங்கள் ஒரு வெள்ளி பதக்கம் என்று 4 பதக்கங்களை வென்றுள்ளார். பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை சுகிதா விமானம் மூலம் திருச்சி வந்தார்.
இதனையடுத்து திருச்சி விமானநிலையத்தில் பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் அவரை மாலை அணிவித்தும், கிரீடம் அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர். இதுகுறித்து
சுகிதா கூறும் போது, “ நான் முதல் முறையாக துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கு பெற்றேன். என்னுடைய கேட்டகிரியில் இந்தியா முழுவதிலும் இருந்து 60க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் ஆரம்பத்தில் சிறிது தடுமாற்றம் இருந்தாலும் உடனடியாக சரி செய்து கொண்டு சுட ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்தில் 60 வது ரவுண்டுகள் சுட வேண்டும். அதை நான் 48 நிமிஷத்தில் முடித்து விட்டேன். அடுத்த நாள் வரை இறுதி முடிவிற்காக காத்திருந்தேன். அடுத்த நாள் முடிவுகள் அறிவிக்கும் போதுதான் நான் தங்கம் வென்றது தெரிய வந்தது. மிகவும் மகிழ்சியாக இருந்தது. ஏனெனில் நான் நன்றாக செய்திருந்தாலும் பதக்கம் வெல்வேன் என நினைக்கவில்லை” என்றார்.
மேலும் படிக்க...
உச்ச நீதிமன்ற ஊழியர்கள் 50 சதவிகித பேருக்கு கொரோனா? இன்றைய வழக்கு விசாரணைகள் ஒரு மணி நேரத்திற்கு ஒத்திவைப்பு...
மகளின் கனவை நினைவாக்க வேண்டும் என்று அவரது தந்தை மோகன் பல லட்சம் செலவு செய்து
டெல்லிக்கு அழைத்து சென்று சிலம்பம் மற்றும் துப்பாக்கி சுடும் போட்டி கலந்து கொள்ள வைத்தார். தந்தைக்கும்
தமிழ் நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக தங்கம் வென்றதாக சுகிதா மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.
செய்தியாளர் : கதிரவன்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.