இந்தித் திணிப்பு: மத்திய அரசுக்கு மரண அடி - மு.க.ஸ்டாலின் பெருமிதம்

திருச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்றும், இதற்காக தொண்டனாக இருந்து பாடுபடுவேன் எனவும் சூளுரைத்தார்.

இந்தித் திணிப்பு: மத்திய அரசுக்கு மரண அடி - மு.க.ஸ்டாலின் பெருமிதம்
ஸ்டாலின்
  • News18
  • Last Updated: June 11, 2019, 8:08 AM IST
  • Share this:
மும்மொழிக் கொள்கையில் மத்திய அரசு பின் வாங்கியதற்கு, திமுக கொடுத்த அழுத்தமே காரணம் என மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும், நீட் உயிரிழப்புக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரின் வெண்கல உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான திறப்பு விழாவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிலைகளை திறந்து வைத்தார்.

இதையடுத்து, மக்களவைத் தேர்தவில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மாபெரும் வெற்றிபெற்றதற்கு வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்புப் பொதுக்கூட்டம் தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் நடைபெற்றது.


இதில் திருச்சி மண்டலத்தில் மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெற்ற திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்துகொண்டு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘‘இந்தித் திணிப்பு விவகாரத்தில் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பலையால்தான் மத்திய அரசு பின்வாங்கியது.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக நாளை தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் இதற்கு தமிழக முதலமைச்சர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. எட்டுவழிச் சாலைக்கான முக்கியத்துவத்தை காவிரி விவகாரத்திற்கு கொடுப்பதில்லை’’ என்று பேசினார்.விழாவில் பேசிய திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் திருநாவுக்கரசர்,‘‘ தமிழகத்தில் அதிமுக அரசை கவிழ்த்து ஆட்சியைப் பிடிப்பதை விட, மக்களைச் சந்தித்து தேர்தல் வெற்றி மூலம் அரியணை ஏறவே ஸ்டாலின் விரும்புகிறார்’’ என்றார்.

உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசும்போது, ‘‘வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் திமுக 200 இடங்களில் வெற்றி பெறும். இதற்காக தொண்டனாக இருந்து பாடுபடுவேன்’’ என்றார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பழனிமாணிக்கம், நாகை செல்வராஜ் உள்ளிட்ட எம்பி-க்களும், மக்களைவைத் தேர்தலில் தங்களை வெற்றிபெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். அத்துடன், தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் எனவும் உறுதியளித்தனர்.

Also see... அதிமுகவில் உட்கட்சி குழப்பத்திற்கு திமுகவே காரணம் - அமைச்சர் ஜெயக்குமார்

Also see...
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see....
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading