• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பணி நியமனம் - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பணி நியமனம் - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்

சேகர் பாபு

சேகர் பாபு

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பணி நியமனம் வழங்கப்படும் என அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

  • Share this:
கொரோனா தடுப்பு நடவடிக்கை ஒரு இயக்கமாக தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. அனைவரும் தடுப்பூசி செலுத்துக்கொள்ள முன்வர வேண்டும். சென்னை மாநகரில் கொரோனா தொற்றை தடுக்க 200 வார்டுகளில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடக்கிறது. 1-வது  வார்டில் இரண்டு இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும். மேலும் நடமாடும் வாகனங்கள் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. இங்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்தேன். குறுகிய காலத்தில் இந்திய அளவில் அதிக தடுப்பூசி செலுத்திய மாநிலம் தமிழகம் தான்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், செயல் பாபு என்னை கூறியது மேலும் எனது பணியை விரைவுப்படுத்தி, ஊக்கப்படுத்தும் தருணமாக எடுத்து கொள்கிறேன். எல்லாம் புகழும் இறைவனுக்கே என்பது போல, எல்லா புகழும் முதல்வர் ஸ்டாலினுக்கே என்று தான் சொல்ல வேண்டும்.

சொன்னதையும் செய்வோம், சொல்லாதையும் செய்வோம் என்பது போல அரசு செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் அறிவித்த திட்டங்கள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும். அடுத்த ஆண்டு மானிய கோரிக்கைக்கு முன்பு நிறைவேற்றபப்படும்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டங்கள் பல நிறைவேற்றப்பட்டு வருகிறது. நீட் தேர்வு இன்று நடைபெற உள்ளநிலையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலை என்ற முடிவு ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 3 கோவில்களில் முழு நேர அன்னதானம் திட்டம் வரும் 17ம் தேதி தொடங்கப்படும்.
ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பததோடு நின்று விடாமல், அதற்கு வாடகை வசூக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதனை தர மறுத்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் காலிப்பணியிடங்கள் வரும்போது அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பணி நியமனம் வழங்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: